பதஞ்சலி கடுகு எண்ணைய் தரமற்றது என ராஜஸ்தான் அரசு அதிரடி அறிவிப்பு


பிரபல யோகா குரு பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்பான கடுகு எண்ணைய் தரமற்றதாக இருப்பதாக ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது. 

ராஜஸ்தானில் உள்ள சிங்கானியா எண்ணைய் ஆலை நிறுவனம் பதஞ்சலி நிறுவனத்துக்கு கடுகு எண்ணைய் விநியோகம் செய்கிறது. அதன்படி பதஞ்சலி விநியோகிக்கப்பட்ட கடுகு எண்ணையில் இருந்து ஐந்து மாதிரிகளை சேகரித்து ராஜஸ்தான் உணவு பாதுகாப்புத்துறை சோதனை மேற்கொண்டது. 

சேகரிக்கப்பட்ட ஐந்து மாதிரிகளும் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது தெரியவந்தது. அவை தேவைப்படும் தரத்திலேயோ தர நிலையிலோ இல்லை என்று தெரியவந்துள்ளது. 

இது குறித்து பேசிய ராஜஸ்தான் மாநில அரசின் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் ராம்பிரகாஷ் மீனா, கடந்த மே மாதம் 27ம் தேதி உள்ளூர் நிர்வாகத்தின் முன்னிலையில் கடுகு எண்ணைய் பாக்கெட்களின் உணவு பாதுகாப்பு குறித்து பரிசோதிக்கப்பட்டது. ஆல்வாரில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வகம் சோதனை அறிக்கையைக் கொடுத்துள்ளது. 

சோதனையின் அடிப்படையில் பதஞ்சலி நிறுவனத்தின் கடுகு எண்ணைய் பாக்கெட், கடுகு எண்ணை பாட்டில் ஆகியவை இரண்டும் தரமற்றவற்றை என்று தெரியவந்துள்ளது. இதே போல ஸ்ரீ ஸ்ரீ தத்வா பிராண்டின் கடுகு எண்ணெயும் தரமற்றது என்று தெரியவந்துள்ளது. பார்லிமெண்ட் பிராண்ட் கடுகு எண்ணையும் தரமற்றது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது,” என கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்; உடல் எடையை குறைக்கும் இந்த வழிமுறைகள் மிகவும் முக்கியம்…


இது குறித்து பதஞ்சலி நிறுவனம் இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெய்லாட்டின் உத்தரவின் பேரில் இரண்டு வாரத்துக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள்  சிங்கானியா எண்ணைய் ஆலையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த பதஞ்சலி எண்ணைய் பாக்கெட்கள், பதஞ்சலி தயாரிப்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். எண்ணைய் ஆலைக்கும் சீல் வைத்தனர். 

-பா.கனீஸ்வரி

#Patanjalimustardoil  #Patanjalimustardoilsubstandard  #mustardoilsubstandard  

 

Comments


View More

Leave a Comments