கொரோனா தொற்றின் போது கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள்


கொரோனா பயம் எல்லோரையும் தொற்றிக்கொண்டிருக்கிறது. லேசா தும்மினாலோ, சளி பிடிச்சாலோ, உடம்பு சுட்டுக்கெடந்தாலோ கொரோனாவாத்தான் இருக்கும்னு பேச்சு. சளி, காய்ச்சல் மற்றும் கொரோனாவுக்கான அறிகுறிகளுடன் இருக்கும் சிலருக்கு நேரிலும் தொலைபேசி மூலமும் ஆலோசனை சொல்கிறேன். பலருக்கும் நல்ல முன்னேற்றம். ஆனால், தேவையற்ற பயம் சிலரை தொற்றிக்கொள்கிறது.

கொரோனா பாதித்திருந்தால் காலை, இரவு நேரங்களில் இட்லி, இடியாப்பம் சாப்பிடுவது நல்லது. அதாவது மிக எளிதாக செரிமானமாகும் உணவுகளை உண்ணுங்கள். 

 

 

பகல் வேளையில் நன்றாக குழைய வேக வைத்த கஞ்சி, மல்லித்துவையல்... அதாவது தனியா... கொத்தமல்லி துவையல் மிகவும் நல்லது. நாக்கு சுவையின்மையை போக்குவதுடன் செரிமான பிரச்சனையை சரிசெய்யும்.

காலை தொடங்கி இரவு வரை நிறைய நீர் அருந்த வேண்டும். கூடவே எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி பழச்சாறுகள் குடிப்பது மிகவும் நல்லது. 2 மணி நேரத்துக்கு ஒரு தடவை மிளகு கஷாயம் குடிக்கலாம். 10 மிளகை எண்ணெய் விடாமல் கருகுமளவு வறுத்து நீர் விட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். சித்தரத்தை, அதிமதுரம் உள்ளிட்ட பல மூலிகைகளால் தயாரான மூலிகைத் தேநீர் பலன் தரும். இரவில் அமுக்கரா சூரணத்தை பாலில் கலந்து குடித்தால் உடல் வலி விலகுவதுடன் காய்ச்சல் தணியும்.

சீந்தில் கொடியுடன் மிளகு, சீரகம், மஞ்சள் தூள், கிராம்பு, வேப்பிலை, இஞ்சி சேர்த்து இடித்து நீர் விட்டு கொதிக்க வைத்து குடிப்பதும் பலன் தரும். மின்சாரத் தைலத்தை கைக்குட்டையில் நனைத்து மோந்து பார்த்தால் சுவாசக் கோளாறுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

வீட்டில் கதவு, ஜன்னல் பகுதியில் சோற்றுக்கற்றாழை செடி மற்றும் ஆகாய கருடன் கிழங்கை கட்டி தொங்க விட்டால் காற்று சுத்திகரிக்க படுவதுடன் ஆக்சிஜன் அளவு அதிகரிக்க உதவும். இதேபோல் முருங்கை விதையின் உள்ளே இருக்கும் பருப்பை சாப்பிட்டால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இதுபோன்ற எளிய வழிமுறைகள் உள்ளன. கொரோனா வந்துவிட்டால் வீணாக பயப்படாமல் எளிய மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்றி நலம் பெறுங்கள்

-மரியபெல்சின்
(திரு. மரியபெல்சின் அவர்களை  95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)

.

#EatingHabits    #CombatCorona   #EatRightAviodCorona  #HeathyFoods 

 


Comments


View More

Leave a Comments