தமிழ்நாட்டில் நடைபெறும் இயற்கை வேளாண் மற்றும் மரபு கலை நிகழ்வுகள்


இயற்கை வேளாண்மை, மரபுகலை பயிற்சிகள் 

நடைபெற உள்ள நிகழ்வுகளின் தொகுப்பு 

வாழ்வியல்பயிற்சிகள் குறித்த செய்திகள் 

மிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை. 

சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட

உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிப்பது குறித்த 2 நாள் பயிற்சி நடத்தப்பட உள்ளது.

Also Read: அதிக கொழுப்புள்ள உணவுகளால் உடல்நலத்துக்கு ஆபத்து

செப்டம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில், சிறுதானியங்களில் இருந்து, மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் (VAP) தயாரிப்பது பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

சிறுதானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, சோளம், திணை, பனிவரகு போன்றவை மக்களால் உணவில் ஓரளவு சேர்த்துக் கொள்ளப்படுகிறது. நகர்புறங்களில் கேழ்வரகு மட்டும் பயன்பாட்டில் உள்ளது.

சிறு தானியங்களில் இருந்து மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

இதனைக் கருத்தில்கொண்டு, இந்த 2 நாள் பயிற்சியில்,சிறு தானிய வகைகளில் உள்ள சத்துக்களையும், அவற்றை உபயோகித்துத் தயாரிக்கப்படும் கீழ்காணும் மதிப்பூட்டப்பட்டத் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

பாரம்பரிய உணவுகள்

பாஸ்தா உணவுகள்

அடுமனைப் பொருட்கள்

உடனடி தயார்நிலை உணவுகள்.

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,500 /= 180% GST மட்டும் சேர்த்துத், தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது பயிற்யின் முதல் நாளில், பணம் செலுத்தியும் கலந்து கொள்ளலாம்.

கூடுதல் விபரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்பத் துறை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் - 641 003. தொலைபேசி எண்: 0422-66112680/1340  என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

#AgriEvents #OrganicTraining #NaturalLife 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai

 


Comments


View More

Leave a Comments