வெறும் காலுடன் உணவு டெலிவரி செய்த நபர் சமூக வலைதளத்தில் குவிந்த பாராட்டுகள்…


சமூக வலைதளங்களில் சில பதிவுகள் நமது இதயத்தைத் தொடக்கூடும். சமீபத்தில், ஒரு பெரிய நிறுவனத்தின் உணவு விநியோக முகவர் விபத்துக்குள்ளான பிறகு வெறுங்காலுடன் பணிபுரியும் ஒரு லிங்க்ட்இன்(LinkedIn ) இடுகை வைரலாகி வருகிறது.

லிங்க்ட்இன் பயனர் தாரிக் கான் என்பவர் எழுதியுள்ள பதிவில், வெறுங்காலுடன் வேலை செய்து கொண்டிருந்த ஸ்விக்கி டெலிவரி நபருடன் பேசியதை பகிர்ந்து கொண்டார், 

ஸ்விக்கி டெலிவரி நபர் ஏன் ஷூ அணியவில்லை என்று கேட்டதற்கு, அன்று ஒரு விபத்தை சந்தித்ததாகவும், கால் மற்றும் கணுக்கால் வீங்கியிருப்பதாகவும் அந்த டெலிவரி நபர் பதிலளித்தார். 

Must Read: “தவறான உணவு வகைகளை உண்ணக் கூடாது”-ஆர்.எஸ்.எஸ்.தலைவர் பேச்சு

"அப்படியானால் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும் மற்றும் வேலை செய்யாமல் இருக்க வேண்டும்." என கூறியதற்கு, டெலிவரி நபர், சிரித்துக்கொண்டே, தன்னை சார்ந்து ஒரு குடும்பம் இருப்பதாக கூறிவிட்டு லிப்டில் இருந்து வெளியேறி, “மாலை வணக்கம் சார்” என்று சொல்லி விட்டு சென்றார்.

“டெலிவரி நபரைப் போன்றவர்கள்தான் என்னை கடினமாக உழைக்கவும், தேவைப்படும்போது என்னை  தூண்டுகிறார்கள் என்று தாரிக் கான் கூறியுள்ளார். 

Must Read:விடுமுறை தினத்தில் சூடான பாம்பே ஹல்வா செய்து உண்ணலாம்…

இந்த கருத்துக்கு LinkedIn பயனர்கள் பல எதிர்வினை கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.  அவர்களில் சிலர் இடுகையைப் பகிர்வதற்குப் பதிலாக அவருக்கு உதவி செய்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.  ஒருவர், "உத்வேகம் பெறுவதைத் தவிர, நீங்கள் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்தீர்கள் என்று நம்புகிறோம்." என்று தெரிவித்துள்ளார். 

அதற்கு தாரிக் கான் அளித்துள்ள பதிலில், டெலிவரி ஏஜென்ட்டுக்கு என்ன உதவி செய்தேன் என்று எழுத விரும்பவில்லை என்று பதிலளித்தார். மற்றொரு பயனர்,  உணவு விநியோக மனிதனை, "உண்மையான ஹீரோ" என்று குறிப்பிட்டிருக்கிறார்.  இந்தப் பதிவு பதிவேற்றப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 7,500 லைக்குகளைப் பெற்றுள்ளது.

#FoodDeliveryAgentBareFeet #FoodDeliveryAgent #ViralPost #SwggyAgent 


Comments


View More

Leave a Comments