தூங்கும் முன்பு என்ன உணவுகள் சாப்பிட வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் தெரியுமா?


இரவில் நன்றாக தூங்க வேண்டும் என்றால் நமது உடல் நிலை மனநிலை இரண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்க நமது உணவுகளும் சிறந்த தாக இருக்க வேண்டும்.

இரவு தூங்கப்போவதற்கு முன்பு ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு தேன் சாப்பிடலாம். அதே போல உறங்கும் முன்பு பாலில் மஞ்சள் கலந்து குடித்தால், ஆரோக்கியம் அதிகரிக்கும்.

தூங்கும் முன்பு வாழைப்பழங்கள் சாப்பிடலாம். தூக்கத்தை அதிகரிக்கும் செரோடோனின் உள்ளிட்ட சத்துகள் வாழைப்பழத்தில் உள்ளன. பாதம் பருப்பு, ஓட்ஸ் ஆகியவற்றையும் இரவு தூங்கும் முன்பு சாப்பிடலாம். பாதம் பருப்பு இதயத்துக்கு மிகவும் நல்லது. ஓட்ஸில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. தூக்கத்தை ஊக்குவிக்கும் மெலடோனினும் அதிகம் உள்ளது.

தூக்குவதற்கு முன்பு மது அருந்துவதைத்தவிர்க்க வேண்டும். வெண்ணைய் கலந்த உணவுகளையும் இரவில் சாப்பிடக் கூடாது. காரமான, கொழுப்பு நிறைந்த உணவுகளையும் இரவு நேரத்தில் அறவே தவிர்க்க வேண்டும். இரவில் காஃபி குடிக்கும் பழக்கம் இருந்தால், அதையும் கைவிட வேண்டும். 


Comments


View More

Leave a Comments