
எளிதாக செரிக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா?
நாம் உண்ணும் உணவானது நமது உடலுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும். குறிப்பாக நமது உடலின் செரிமான சக்திக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், எளிதாக ஜீரணிக்கும் உணவுகளை நாம் உண்ணுவது மிகவும் அவசியமாகும்.
சோளம், தினை, பார்லி உள்ளிட்ட முழு தானியங்களை உணவாக சமைத்து அடிக்கடி உண்ண வேண்டும். முழு தானியங்களில்தான் தாதுக்கள், வைட்டமின் சத்துகள் அதிகம் உள்ளன. இவை நமக்கு புற்றுநோய், இதயநோய், நீரழிவு நோய்களை ஏற்படுத்தாது. இந்த உணவுகள் எளிதாக ஜீனரணமாகின்றன.
கீரை வகைகள் அனைத்துமே நம் உடல் நலனுக்கு ஏற்றவைதான். குறிப்பாக இலை கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். சிறுகீரை, முளைக்கீரை, வெந்தைய கீரை, கீழா நெல்லி கீரை உள்ளிட்ட அனைத்து வகை கீரைகளும் ஏராளமான தாதுக்களைக் கொண்டுள்ளன. செரிமான கோளாறால் ஏற்படும் வாய்புண் கோளாறுகளுக்கும் கீரைகள் மிகவும் ஏற்றவை.
மீன் வகைகள், கோழி இறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றில் லீன் புரோட்டின் சத்துகள் அதிகம் இருக்கின்றன. இவற்றையும் நாம் அளவோடு எடுத்துக் கொண்டால் நமது உடலின் செரிமான சக்தி சீராக இயங்கும்.
Comments