டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட்டு வீரர்களின் காலை உணவு இதுதான்...


 

விளையாட்டு வீரர்களுக்கு காலை உணவு முக்கியம் 

ஆற்றல் மிக்க காலை உணவு அவசியம் 

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 3 வகையான மெனு

நாளொன்றுக்கு 48,000 பிளேட் உணவு பரிமாறப்படுகிறது 

 
காலை உணவு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி, அன்றைய நாளின் மிக முக்கியமான உணவாகும். இது நாள் முழுவதும் நமக்கு ஆற்றலை அளிக்கிறது. பெரும்பாலான உடற்பயிற்சி நிபுணர்கள் நிறைய ஊட்டச்சத்துக்களுடன் கூடிய உணவை பரிந்துரைக்கின்றனர்.
 
விளையாட்டு வீரர்களுக்கும், காலை உணவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்ல தேவையில்லை, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றிருக்கும் இந்திய ஒலிம்பிக் வீரர் மேரிகோம் காலை உணவு உட்கொண்ட ஒரு படத்தை தமது முகநூலில் பகிர்ந்துள்ளார். படத்தில், அவர் உணவு தட்டுக்கு முன்பு பிரார்த்தனை செய்வதை காணலாம். மேரி கோம் இந்த இடுகையை “காலை உணவு நேரம்” என்று தலைப்பிட்டு, ‘டோக்கியோ 2020’ மற்றும் ‘சியர் 4 இந்தியா’ என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி உள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் காலை உணவு உண்ணும் முன்பு பிராத்திக்கும் மேரிகோம்

மேரி கோமின் ஆரோக்கியமான காலை உணவில் ஒரு கிண்ணத்தில் புதிய ஆரஞ்சு பழத் துண்டுகள், வெண்ணைய் சேர்த்து வேகவைக்கப்பட்ட முட்டை, இறைச்சி வறுவல், வேகவைத்த காய்கறிகள் இருந்தன. ஒரு கிண்ணத்தில் பாரம்பரியமான மிசோ சூப்பும் இருந்ததை பார்க்க முடிந்தது. இது ஜப்பானில் உண்ணப்படும் ஒரு பொதுவான காலை உணவாகும்.

இதையும் படியுங்கள்:கலவைக் கீரை செய்யறது ரொம்ப ஈஸி….

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள உணவகங்களில் உலகெங்கிலும் இருந்து வந்திருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு நாளும் 48,000 பிளேட் உணவு பரிமாறப்படுகிறது. இவற்றில் சில உணவகங்கள் 24 மணி நேரம் திறந்திருக்கும்.  மேற்கு நாடுகள், ஜப்பான் மற்றும் ஆசியா என மூன்று வகை உணவு மெனுக்கள் உள்ளன. இந்திய வீரர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் உண்ணும் காலை உணவுகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 1) வெண்ணைய் கலந்த முட்டை

 வெண்ணைய் சேர்த்து சமைக்கப்படும் முட்டை உணவு பஞ்சுபோன்ற அதிக சத்துகள் கொண்டதாகும். முட்டையுடன் காலை உணவைத் தொடங்குவதன் வாயிலாக விரைவாகவும் எளிதாகவும் நமக்கு ஆற்றல் கிடைக்கிறது.  புரதம் நிறைந்த காலை உணவாக அது இருக்கிறது.  

 2) ஓட்ஸ் கஞ்சி

ஆரோக்கியமான மற்றும் அற்புதமான உணவாகும்.   ஓட்ஸ் கொண்டு தயாரிக்கப்படுகிறது, ஆப்பிள், இலவங்கப்பட்டை மற்றும் தேன் ஆகியவற்றைக் கொண்டு பால் சேர்த்து வேகவகைக்கப்படுகிறது. வறுத்த ஆளி விதைகள் மற்றும் எள் ஆகியவற்றை மேலே தூவி உண்ணலாம். 

3) கீரை அப்பம்

கீரையின் நன்மைகளுடன் வழக்கமான நாம் உண்ணும் அப்பத்தையும் சேர்த்து சமைத்தால், அது ஒரு அற்புத உணவாக இருக்கும். இந்த உணவை மிக எளிதாக செய்து விடலாம். ஓட்ஸ், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் வறுத்த அக்ரூட் பருப்புகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

 4) பார்லி டாலியா

டோக்கிய ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களின் காலை உணவு பார்லி டாலியா

 முந்தைய நாள் இரவில் ஊறவைத்த பார்லியைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது, இத்துடன் காய்கறிகள் மற்றும் கடுகு, கறிவேப்பிலை மற்றும் பூண்டு, கிராம்புகள் சேர்த்து வேகவைத்து சாப்பிட வேண்டும். 

  இதையும் படியுங்கள்:மாட்டுப்பாலிற்கு பின் இருக்கும் அரசியல் 

 5) சோயா போஹா

 இது ஒரு சுவையான காலை உணவு, ஊற வைத்த அரிசியுடன்  சோயா மற்றும் பட்டாணி மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளை சேர்த்து  சமைக்க வேண்டும். கூடுதல் சுவைக்காக  எலுமிச்சை சாற்றை பிழிந்து கொள்ளலாம்

 6) வாழைப்பழம் மற்றும் வேர்க்கடலை 

இந்த காலை உணவு உண்ணும்போது அந்த நாள் மிகச் சிறப்பான நாளாக இருக்கும். இது சியா விதைகள், வாழைப்பழங்கள், வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் பாதாம் ஆகியவை சேர்க்கப்பட்ட சத்துமிக்க காலை உணவாகும். 

 7) வாழைப்பழம் மற்றும் வால்நட் 

ஒரு வாழைப்பழம், சில அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் மற்றும் சியா விதைகளுடன் தேன் சேர்த்து தயிருடன் கலக்கவும். இது சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவாகும். சத்து மிகுந்த உணவுடன் ஒரு நாளை உற்சாகமாக தொடங்குங்கள். 

-பா.கனீஸ்வரி

#OlimpicPlayersDiet #DietForSportsPersons #DietBreakfast

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்  


Comments


View More

Leave a Comments