#6PointsForHeathy மாலை நேரத்து பசியை போக்க என்ன சாப்பிடலாம்…?


உப்பு, காரமான அல்லது இனிப்பு ஏதாவது சாப்பிட வேண்ண்டும் என்று திடீரென்று விருப்பம் ஏற்படுவது நம்மில் பலருக்கு இயல்பாக இருக்கிறது. அது போன்ற சமயங்களில் பிடித்த ஓட்டலுக்குச் செல்லும் வரை அல்லது உங்கள் குளிர்சாதனப்பெட்டியில் என்ன இருக்கிறது என்று தேடுவது போன்றவற்றை செய்வோம்.  

போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது பசிக்கு வழிவகுக்கும். நாம் அடிக்கடி தாகத்தையும் பசியையும் குழப்பிக்கொண்டு ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுகிறோம்.மோசமான தூக்கத்தின் காரணமாக அல்லது தூக்கமின்மையால் அவதிப்படும்போது அது  நமது ஹார்மோன்களைபாதிக்கிறது, இது பசிக்கு வழிவகுக்கிறது.புரதம், நார்ச்சத்து மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் இல்லாத உணவே சாப்பிடுவதால் திடீரென்று பசிக்கிறது. உங்கள் பசியை பூர்த்தி செய்ய எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை உண்பது நல்லது. 

Must Read: 4 ஆம் தேதி கோவை மாவட்ட இயற்கை விளைபொருள் நுகர்வோர் கூட்டமைப்பு தொடக்கம்…

1)தயிர்:  சாதாரண தயிரைத் சாப்பிடுவதை விடவும், சுவையூட்டப்பட்ட தயிரை தேர்ந்தெடுப்பது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. 

இது போல மாற்றம் செய்யும் போது சர்க்கரையை குறைக்கலாம். பழங்கள், ஆளி விதைகள், பூசணி விதைகள் மற்றும் சியா விதைகள் ஆகியவற்றுடன் தயிர் சாப்பிடலாம். நீங்கள் பயணம் செய்யும் போது உண்ண ஏற்ற உணவு இதுவாகும். 

2)சானா/ கொண்டைக்கடலை : புரதம் நிறைந்த உணவாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், வேகவைத்த கொண்டைக்கடலை அல்லது சானாவை சாப்பிடலாம். உங்களுக்கு பிடித்த காய்கறிகளில் எலுமிச்சை, உப்பு,  மசாலா மற்றும் புதிய கொத்தமல்லி இலைகளை சேர்த்தும் சாப்பிடலாம். இது ஒரு விரைவான, சுவையான மற்றும் சத்தான நொறுக்கு தீனியாக அமைகிறது.

மாலை நேரத்து பசியை போக்க ஆரோக்கிய உணவுகள்

3)பேரிச்சம்பழம் மில்க் ஷேக்:  இனிப்பு சாப்பிட வேண்டும் போல் இருந்தால், இந்த சுவையான மில்க் ஷேக்  சரியான ஆரோக்கியமான மாற்றாக இருக்கும்.  உடனடி ஆற்றலுக்காக மாலை அல்லது உடற்பயிற்சிக்கு முன்பாக  பானமாக இதை உட்கொள்ளலாம்.

4)நட்ஸ்: பாதாம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும். செலினியம், துத்தநாகம், பொட்டாசியம், ஃபோலேட் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் இவை ஒரு நல்ல சிற்றுண்டியாக இருக்கும். 

5)பாப்கார்ன் அவுரி நெல்லி  கலவை: வெற்று பாப்கார்ன், உலர்ந்த அவுரிநெல்லிகள் மற்றும் வறுத்த பாதாம் ஆகியவற்றைக் கலந்து சுவையான கலவையை உருவாக்கவும். இதை மாலை நேர பசிக்கு உண்ணுங்கள். 

Must Read: கீரைகளின் முக்கியத்துவத்தை சொல்லும் கீரை மருத்துவமனை புத்தகம்…

6)பழம்: சிரமமில்லாத மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி உடற்பயிற்சிக்கு முந்தைய உணவாக சிறப்பானதாக இருக்கும். 

நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற விரும்பினால், எந்த உணவாக இருந்தாலும், எப்போதும் அளவோடு இருக்க வேண்டும். 

#6PointsForHeathy #EatHealthySnacks  #HealthySnacks  #EveningSnacks  


Comments


View More

Leave a Comments