மாட்டுப்பாலிற்கு பின் இருக்கும் அரசியல் நக்கீரன் எழுதிய ‘பால் அரசியல்’ நூல் மதிப்பீடு


பால் அரசியல் சில தகவல்கள் 

நமது உணவு கலாச்சாரம்

பால் பவுடர் ஆதிக்கம் 

மாடுகள் குறித்த அரசியல்  

தாய்ப்பாலின் முக்கியத்துவம், தாய்ப்பாலை தவிர்த்துவிட்டு புட்டிப்பாலை அறிமுகப்படுத்த வணிகப் பெருநிறுவனங்கள் மேற்கொண்ட அறமில்லா முயற்சி, மாட்டுப்பாலிற்கு பின் இருக்கும் அரசியல் என அணுஅணுவாய் நிகழ்வுகளை வெளிப்படுத்துகிறது இந்நூல்.

பொய்ப் பிரசாரம்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், விவசாயத்தில் புகுத்தப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளைப் போல, அந்த தீவிரப் போருக்குப் பின், தாய்ப்பால் கொடுப்பது அநாகரீகமான செயல் என்ற பொய்ப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, பால் பவுடர் கணவான்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திய சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன. 

இதையும்படியுங்கள்:மருத்துவப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் தேங்காய் சுடும் பண்டிகை

முகவர்கள் மூலம் தாய்ப்பாலை மட்டுப்படுத்தி, பவுடர் பாலை உயர்த்திய நிறுவனங்கள் அதிகம். ’அனைவருக்கும் பால் பவுடர் பாக்கெட்டுகள் இலவசம்’ என்ற முறையை கையாண்டு தங்கள் பொருட்களை பிரபலப்படுத்தியுள்ளன. 1990களில் நமது உணவு கலாச்சாரத்தை சீரழிக்க குறுக்கில் நுழைந்த நூடுல்ஸ் நிறுவன தந்திரங்கள் நினைவுக்கு வருகின்றன.

மாட்டுப்பாலிற்கு பின் இருக்கும் அரசியல்  நக்கீரன் எழுதிய ‘பால் அரசியல்’ (நூல் மதிப்பீடு)

தாய்ப்பாலை முன்னிறுத்தி பெண்ணியத்தை சீரழிக்கும் விளம்பரங்கள் ஏகபோகத்துக்கு ஒளி/ஒலிபரப்பியிருக்கின்றன சில முக்கிய அமைப்புகள். சமீபத்தில் ‘மெலமைன்’ எனும் வேதிப்பொருள் கலக்கப்பட்ட புட்டிப்பாலை அருந்திய சீனக் குழந்தைகளுக்கு சிறுநீரக கற்கள் தோன்றும் விபரீதங்களையும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

மான்சாண்டோவின் தந்திரங்கள்

பால் மாவு வணிகம் அதிகரித்தவுடன், மாட்டுப்பாலுக்காக மனிதன் –மாடுகள் தொடர்புடைய உலகத்தில் நடந்த அரசியலும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. மரபு மாற்ற வேலைகளில் ஈடுபடும் மான்சாண்டோவின் தந்திரங்களையும் சொல்லியிருக்கிறார்.

இதையும்படியுங்கள்:கலவைக் கீரை செய்யறது ரொம்ப ஈஸி….

படிக்கும் பொது படபடப்பையும் நல்லதொரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். ’தாய்ப்பால், புட்டிப்பால், மாட்டுப்பால்’ இவற்றின் செயல்பாடுகளை தெரிந்துகொள்ள பால் அரசியல் நூலை வாங்கிப் படியுங்கள்..நிச்சயம் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம்.

புத்தகம் கிடைக்கும் இடம் 

எதிர் வெளியீடு (விலை – ரூ.60)

ஆசிரியர் – நக்கீரன்

தொடர்புக்கு - 9790440220

-Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

#TamilBooks  #PaalArasiyalBook  #MilkHistory  #HistoryOfMilk 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும் 

 


Comments


View More

Leave a Comments