உடல் எடையை சீராக வைத்திருக்க உதவும் 5 காய்கறிகள் என்ன தெரியுமா?
ஏராளமான காய்கறிகளைக் கொண்ட வழக்கமான உணவு, இதய நோயைத் தடுக்கவும், ரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
ஆரோக்கியமான எடை இழப்பு, தொப்பை கொழுப்பு ஆகியவற்றை குறைக்க ஐந்து சிறந்த காலை உணவு பழக்கங்களைப் பாருங்கள்.
1 ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி பல்வேறு சத்துகளைக் கொண்ட காய்கறி ஆகும். பச்சையாக, வேகவைத்த அல்லது வதக்கி சாப்பிட ஏற்றது.பல்வேறு சத்துகள் நிறைந்திருப்பதால் உங்களின் எடை குறைப்புக்கு ஏற்ற உணவாகும்.
ப்ரோக்கோலியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இவை உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கும். ப்ரோக்கோலியில் உள்ள சத்துக்கள் அவை செயல்படும் விதத்தில் தனித்தன்மை வாய்ந்தவை
Must Read:சென்னையில் அக்டோபர் 2ம் தேதி உணவே மருந்து மருந்தே உணவு பயிற்சி முகாம்
சல்ஃபோராபேன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தாவரக் கலவையை உடலுக்கு வழங்குகிறது. இந்த காய்கறியை தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது அழற்சிக்கு எதிராக செயல்புரிகின்றது. நாள்பட்ட அழற்சி எடை அதிகரிப்பை ஏற்படுத்தும். அதைக் குறைப்பது எடையைக் குறைக்க உதவும்.
2 குடைமிளகாய்
மிதமான சுவை கொண்ட ஒரு காய்கறியாகும், எனவே பல்வேறு வகையான உணவுகளில் சேர்ப்பது சிறந்ததாகும். குடைமிளகாய் எடை இழப்பு உணவில் சேர்க்க உகந்த காய்கறியாகும். குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவை, உணவுக்குப் பிறகு முழுமை உணர்வை உருவாக்க உதவுகின்றன.
உடல் எடையைக் குறைப்பதைத் தவிர, குடைமிளகாய்ப்பழம் உடலுக்கு குறிப்பிடத்தக்க வகையில் நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. சிவப்பு குடைமிளகாய் ஆரஞ்சுப் பழத்தை விட வைட்டமின் சி அதிகமாக கொண்டதாகும். இது நோயெதிர்ப்பு சக்திக்கு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்..
3 பெரிய வெங்காயம்
பூண்டு, வெங்காயம், சின்னவெங்காயம் போன்றவை அல்லியம் வகை காய்கறிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த காய்கறிகள் சுவை நிரம்பியவை, ஆரோக்கியமான உணவுத் திட்டத்திற்கு சிறந்தவை. அவற்றை உணவில் சேர்ப்பதால் அதிக கலோரி சுவை சேர்க்கைகளை ஈடுசெய்யும்.
குறைந்த கலோரி, அதிக சுவை கொண்ட காய்கறிகளை சூப்கள் முதல் சாஸ்கள், சுவையூட்டிகள் மற்றும் சாலடுகள் மற்றும் பல வழிகளில் பயன்படுத்தலாம். வெங்காயம் ஆரோக்கியமான நுண்ணுயிர் சமநிலை மற்றும் செரிமானத்தை தூண்டும் ப்ரீபயாடிக்குகளின் சிறந்த மூலமாகும் .
4 காய்ந்த மிளகாய்
உங்கள் சமையலறையில் சிறிது மசாலாப் பொருட்களைக் கையாளக்கூடியவராக இருந்தால், உடல் எடையைக் குறைக்க உங்கள் உணவில் சில காரமான மிளகாயை சேர்க்கலாம்.
Must Read:மலச்சிக்கல், கபம், தோல் நோய்களுக்கு மூலிகை மருத்துவம்…
ஒருவரின் உணவுத் திட்டத்தில் காரமான மிளகாய்களைச் சேர்ப்பது உணவுகளின் சுவையை அதிகரிக்க உதவும். மிளகாய் வகையிலிருந்து வரும் காய்கறிகளின் சுவாரஸ்யமான விஷயம், அவை மனநிலை மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டது என்பதுதான். சிலரின் உடலில் சேரும் கூடுதல் கொழுப்பை எரிக்க உதவுகிறது.
5 பீட்ரூட்
பீட்ரூட்டை சிலர் விரும்புகிறார்கள், மற்றவர்கள் வெறுக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஒரு பீட்ரூட் பிரியராக இருந்தால், அவை எடையைக் குறைக்க உதவும் ஏராளமான பயனுள்ள ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.
"நைட்ரேட்டுகள் நிறைந்திருப்பதால், நைட்ரிக் ஆக்சைடை அதிகரிப்பதற்கான ஒரு வழியாக விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிக செயல்திறன் கொண்டவர்களால் இது விரும்பப்படுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும். பலர் பீட்ரூட் சாற்றை விரும்புகின்றனர் எனவே அதனை பழரசம் போலவும் குடிக்கலாம். .
-பா.கனீஸ்வரி
5VegitablesForWeightLoss #VegetablesForWeightlos
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
s # HowToLossWeight
Comments