கருப்பை கட்டி பிரச்னைக்கு கல்யாண முருங்கை இலை சாறு


எதிர்கால சந்ததியினரை கருப்பையில் தாங்கி வளர்த்தெடுக்கும் பெண்களுக்கு கருப்பையில் கட்டி வருவது தற்போதைய காலத்தில் அதிகரித்திருக்கிறது. கருப்பை கட்டிக்கு இயற்கை முறையிலேயே, அதாவது நாம் சாப்பிடும் அன்றாட உணவுப்பொருட்களைக் கொண்டே தீர்வு காணமுடியும். இது குறித்து இயற்கை மருத்துவ ஆர்வலர் திரு.பெல்சின் தரும் குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

“கடந்த சில நாட்களாக என்னிடம் தொலைபேசி அழைப்புகள் மூலம் பேசியவர்கள் கருப்பை கட்டி குறித்தே பேசினார்கள். தவறான உணவுப்பழக்கம், போதிய ஊட்ட உணவுகளை உண்ணாதது என பல காரணங்களால் இந்தப் பிரச்சினை வந்து பெண்களை பாடாய்ப்படுத்துகிறது.

அவர்கள் அனைவருக்கும் சோற்றுக்கற்றாழையை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, கல்யாண முருங்கை இலையை சாறு எடுத்துக் குடிப்பது அல்லது வடை அல்லது தோசை மாவுடன் கலந்து சாப்பிடுவது, எள், உளுந்து உணவுகளை உண்பது, பப்பாளி மற்றும் அன்னாசிப் பழங்களைச் சாப்பிடுவது என மிக எளிமையான உணவுகளை உண்ணச் சொன்னேன். அதேநேரத்தில் சிக்கன் உள்ளிட்ட இறைச்சி உணவுகளை உண்ண வேண்டாம் என்று வலியுறுத்திச் சொன்னேன்.

அதிக ரத்தப்போக்கினால் அவதிப்படும் பெண்களையும் பார்க்க முடிகிறது. ஏலக்காய் பொடியை நாட்டு வாழைப்பழத்தில் தோய்த்துச் சாப்பிடுவது, அத்திக்காய்களை பொரியல் செய்து சாப்பிடுவது, வில்வ இலையை அரைத்துச் சாப்பிடுவது என எளிய வழிமுறைகளைச் சொன்னேன். வாழைப்பூவை அரைத்து சாறு எடுத்துக் குடிப்பதும் பலன் தரும்” என்று சொன்னேன்.

-மரிய பெல்சின்

(திரு. மரியபெல்சின் அவர்களை  95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)

#KalyanaMurungaiExtracts  #CureForUterineTumor  #NatureCure   


Comments


View More

Leave a Comments