2022ம் ஆண்டு முதல் இதையெல்லாம் கவனித்து உணவுப் பொருட்களை வாங்குங்கள்


இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம்தான் நாடு முழுவதும் விற்பனை ஆகும் உணவுப் பொருட்களின் தரத்தை சோதனை செய்கின்றது. உணவகத்துக்கு, ரெஸ்டாரெண்ட்களுக்கும் இவற்றின் அனுமதியைப் பெற வேண்டியது முக்கியம். அதே போல பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள் தரநிலைப்படி இருக்கின்றன என்று குறிப்பிடப்பட வேண்டியதும் முக்கியம்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் வரும் 2022ம் ஆண்டு முதல் புதிய விதிமுறைகளை அமல்படுத்துகிறது.

அதன்படி உணவுப் பாக்கெட்களின் மீது அது எப்போது expiry ஆகிறது என அதாவது காலாவதியாகிறது என்பதை அவசியம் குறிப்பிட வேண்டும். எத்தனை நாள் வரை வைத்திருந்து சாப்பிடலாம் என்றும் கூற வேண்டும். உணவுப்பொருளில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் குறிப்பிட வேண்டும். சைவமா, அசைவமா என்பதையும் உணவுப்பாக்கெட்டில் இனிமேல் குறிப்பிட வேண்டும். இது தவிர மேலும் சில விதிமுறைகளும் 2022ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. உணவுப் பொருட்களை வாங்கும்முன்பு இவையெல்லாம் இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டியது நமது கடமையும் கூட.


Comments


View More

Leave a Comments