விடுமுறை தினத்தில் சூடான பாம்பே ஹல்வா செய்து உண்ணலாம்…
விடுமுறை தினத்தில் வீட்டில் இருப்போருக்கு ருசியான திண்பண்டங்களை செய்து கொடுக்க விரும்புவோர் இந்த பாம்பே ஹல்வாவை முயற்சிக்கலாம். பாம்பே ஹல்வா செய்முறை;
தேவையான பொருட்கள்
கார்ன் ஃப்ளோர் 200 கிராம்
சர்க்கரை.. 600 கிராம் .
தண்ணீர்.. 150 மில்லி

சமையல் எண்ணெய்; ஒரு குழிக் கரண்டி
ரெட் கலர்.. ஒரு பின்ச்
ஜாதிக்காய்; சிறிது
நெய்; 2 டேபிள் ஸ்பூன்
உடைத்த முந்திரி பருப்பு; 100 கிராம்
செய்முறை;
ஒரு பாத்திரத்தில் கார்ன் மாவு போட்டுக் கொண்டு 150 ml தண்ணீர் விட்டு பால் போலக் கரைத்துக் கொள்ள வேண்டும்..அடுப்பைப் பற்ற வைத்துக் கொண்டு.. கடாயில் பாதி அளவு சர்க்கரையை போட்டு. மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்..
Must Read: “நுரை ததும்பும் காபியை, சிப் சிப்பாக சுவைக்க வேண்டும்..”
சர்க்கரை கரைந்ததும் கார்ன் மாவு கரைசலை சேர்த்து சிம்மில் வைத்து நன்கு மெதுவாக் கிளறிக் கொடுக்கவும்.மாவு வெந்து திரண்டு வரும் போது.. மீதமுள்ள சர்க்கரை சேர்த்து.. குழிக் கரண்டி எண்ணெய் சேர்த்து.. மீண்டும் நன்கு கலக்கவும்..

பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு பந்து போல வரும் நேரம்.. சிவப்பு நிறத் தண்ணீர் சேர்த்து.. பச்சையாக உடைத்து வைத்த முந்திரி.. நெய்.. ஜாதிக்காய் ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறிக் கொடுக்கவும். கரண்டியில் இருந்து தானாக விழும் பக்குவத்தில் எடுக்கவும்..
நெய் தடவிய தட்டில் கொட்டி.. நன்கு ஆறியதும் வில்லைகள் போடவும்.. அருமையான பாம்பே ஹல்வா தயார். நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே..
நன்றி; சுதா விச்சு
#EveningSnaks #EveningFoods #BombayHalwa #HowToPrepareBombayHalwa

Comments
View More