கரிசலாங்கன்னி லட்டு ருசித்திருக்கிறீர்களா?


தமிழ்நாட்டில் பல இடங்களில்  வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும். 

கரிசாலை லட்டு

சத்திலும் சுவையிலும் சிறந்தது வெள்ளை கரிசாலை(கரிசலாங்கன்னி) லட்டு மற்றும் நெல்லிக்காய் மாதுளைப்பூ தேநீர். இயற்கை விவசாயி சரோஜோ குமார்  அம்மாவின் சிந்தனைக்கு உருவம் கொடுத்து அட்டகாசமான முறையில் இந்த தேநீர் உருவாகி இருக்கிறது. வளரும் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் உட்கொள்ளும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. சிற்றுண்டியாக தின்பண்டமாக உணவுடன் கொடுத்தனுப்ப கரிசாலை லட்டு ஏற்றது. 

Must Read: உயிர்ம வேளாண் கொள்கையில் வலுவான திட்டங்கள் இல்லை

நமது நெல்லிக்காய்_மாதுளைப்பூ_தேனீர் ஆனது குடித்தவுடன் புத்துணர்ச்சி அளிக்கும். கரிசாலை லட்டு - 250/500கிராம், நெல்லிக்காய் மாதுளைப்பூ தேனீர் - 250/250கிராம்.

உட்கொள்ளும் முறை:

கரிசாலை லட்டு

கரிசாலை லட்டு -  பசி எடுக்கும் நேரத்தில் அப்படியே உட்கொள்ளலாம்,நெல்லிக்காய் மாதுளைப்பூ தேனீர் - 2கிராம் அல்லது 1/2டீஸ்பூன் அளவு தேனீர் பொடியை 200மி.லி. அளவு தண்ணீரில் சேர்த்து தேவையான அளவு கரும்பு அல்லது பனை இனிப்பு சேர்த்து மூன்று நிமிடம் கொதித்த பின் வடித்தால் தேனீர் தயார். நமது பொருட்களை பெறவும் மேலும் விபரங்கள் அறியவும் 08940882992  எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

நரிப்பயிறு (பனிப்பயிறு)

காராமணி என்று அழைக்கப்படும் இந்த பயறு வகை தாவரம் கார்த்திகை பட்டத்தில் மானாவாரியாக (நீர் தேவை இன்றி) விளையக்கூடியது. விதைக்கும் போது ஈரம் இருந்தால் போதும் அதன் பிறகு பெய்கின்ற பனியிலேயே விளைந்து விடும். அதனால் தான் இதற்கு பனிப்பயிர் என்ற ஒரு பெயரும் உண்டு. 

சத்துள்ள நரிப்பயிறு

இந்த வருடம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 100 கிலோ மூட்டை 13 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இது எந்த மளிகை கடைகளிலும் விற்பனைக்கு கிடைப்பதில்லை. அனைத்தும் சத்துமாவு பெருநிறுவனங்களுக்கு   கொள்முதல் செய்யப்படுகிறது.

Must Read: வானகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நம்மாழ்வாரின் 85 வது பிறந்தநாள் விழா

இந்த நரி பயிரில் சாம்பார், சுண்டல், பாயாசம், வடை, கொழுக்கட்டை, சத்துமாவு என இன்னும் எத்தனையோ உணவுகளை நம் வீட்டிலேயே தயாரிக்கலாம். நல்ல விலை கிடைத்தாலும் ரசாயன உரங்களாலும் பூச்சிக்கொல்லி நஞ்சுகளாலும் விளைவிக்கப் பட்டவைகளோடு இயற்கை வழி வேளாண்மையில் விளைந்ததை சேர்க்க மனமில்லை. இது தகுதியானவர்களை சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

 சத்து நிறைந்த நரிப்பயிரை தங்கள் வீட்டு உணவில் சேர்த்து பயனடைய விரும்புவோர் தொடர்பு கொள்ளவும். விலை: ஒரு கிலோ 150 ரூபாய் (அனுப்புகிற செலவு தனி) தொடர்புக்கு: 9566945969

#organicfarming  #organicmarketing #naturefood

TRENDING;  மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்குநம்மாழ்வார் பிறந்தநாள்,  தேன்சாப்பிடும் முறை

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments