#ThisDayHealthyHerbs இருமலுக்கு தீர்வு தரும் மூங்கில் இலை சாறு


1.மூங்கில் என்பது நீண்ட கூரான முனை உடைய சொரசொரப்பான மெல்லிய இலைகளை கொண்ட முள்ளுள்ள கூட்டமாக நீண்டு வளரும் மரம். 

 

2.இலை வேர் விதை ஆகியவை மருத்துவ குணம் உடையது இசிவு அகற்றுதல் உடல் உரமாக்கல் காமம் பெருக்குதல் மருத்துவ குணம் உடையது. 

 

3.இலை மாதவிடாய் தூண்டி யாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படும் மூங்கில் இலையை அரைத்து முள் தைத்த இடத்தில் வைத்து கட்ட முள் வெளியாகும்

Must Read: 5PointsForHealthy மலச்சிக்கலைப் போக்கும் கசகசா

4.இலையை சிறிது நீர் தெளித்து இடித்து பிழிந்த சாறு 15 மில்லியுடன் சிறிது தேன் கூட்டி காலை மாலை பருகி வர இருமல் தீரும் 

 

5. இலையை உலர்த்தி ஒளித்து சாம்பலாக்கி புண்கள் மீது தூவ அவை விரைந்து ஆறும் இலைச் சாம்பலால் பல் தேய்க்க பற்கள் பளிச்சிடும் 

 

6.100 கிராம் மூங்கில் குருத்தை சிதைத்து 2 லிட்டர் நீரில் இட்டு ஒரு லிட்டர் ஆகும் வரை காய்ச்சி வடிகட்டி காலை மதியம் மாலை 50 மில்லியாக குடித்துவர பேறுகால கருப்பை அழுக்குகள் குடற்புழுக்கள் ஆகியவை வெளியேறும் சூதகக்கட்டு வெள்ளை காய்ச்சல் ஆகியவை தீரும் 

-ASNசாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை ஆதனூர் திருவண்ணாமலை மாவட்டம் 9442311505


Comments


View More

Leave a Comments