ஆன்லைன் உணவு விநியோகத்தில் 9ம் இடம் பிடித்த ஸ்விக்கி


எதிலும் அவசரம், எங்கும் அவசரம், மின்னல் வேகம் என்று இயங்கிக் கொண்டிருக்கும் நமக்கு உணவு உண்ணுவதற்கு கூட நேரம் இல்லை. அப்புறம் எப்படி சமைப்பதற்கு நேரம் இருக்கும். சமைக்கக்கூட வேண்டாம் ஒரு உணவகத்துக்கு சென்று சாப்பிடுவதற்கு கூட நமக்கு நேரம் இல்லை.

உணவகங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் மொபைல் செயலிகள் மூலம் உணவை ஆர்டர் செய்து பெறுவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.  இந்தியாவின் உணவு விநியோக செயலிகளான ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற நிறுவனங்கள் உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் உணவு விநியோக நிறுவனங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன. 

Must Read: இயற்கை வேளாண் விளை பொருட்கள் சென்னையில் கிடைக்கும்…

கனடாவை சேர்ந்த இடிசி குழுமம் என்ற உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. நெருக்கடி, லாபம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மாற்றும் சக்தி என்ற தலைப்பில் தனது ஆராய்சி அறிக்கையை இந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதில் சீனாவின் Meituan என்ற உணவு விநியோகச் செயலி பிடித்துள்ளது. இந்தியாவின் செயலியான ஸ்விக்கி ஒன்பதாவது இடத்திலும், ஸொமேட்டோ பத்தாவது இடத்திலும் உள்ளன. இந்த அறிக்கையில் அமெரிக்காவை தலைமையிடமாக க் கொண்டு செயல்படும் ஊபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன. 

ஸ்விக்கி

இந்தியாவில் மிகவும் பிரபலம் ஆக உள்ள உணவு விநியோக மொபைல் செயலி, வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த உணவுப்பொருட்கள் குறித்து ஒவ்வொரு நிமிடமும் செயலியில் வாடிக்கையாளர்களுக்கு அப்டேட் செய்கின்றது. 

9ம் இடம் பிடித்த ஸ்விக்கி

ஸொமேட்டோ 

இந்த உணவு செயலி கடந்த 2008-ம் ஆண்டில் ஃபுட்டிஈபே என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பின்னர் இது ஸொமேட்டோ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவில் மட்டுமின்றி 25 நாடுகளில் உணவு டெலிவரி பணியை மேற்கொள்கிறது. உங்கள் வீட்டுக்கு அருகில் அல்லது உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள ரெஸ்டாரெண்ட் மற்றும் உணவகங்களை செயலில் துல்லியமாக காட்டுகிறது.

10 ஆம் இடம் பிடித்த ஸ்மோட்டோ 

உணவகங்களின் மெனுக்கள், விலை விவரங்கள், எவ்வளவு நேரத்தில் டெலிவரி செய்யப்படும் என்பது போன்ற விவரங்களுடன் இந்த நிறுவனம் உணவு டெலிவரியில் முன்னணியில் இருக்கிறது.

 மேலும் இத்தகைய உணவு விநியோக தளங்கள் குறித்து கனடா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவில், `` உணவு விநியோக செயலிகள்  அந்தந்த உள்ளூரில் உள்ள உணவு விடுதிகளை  வாடிக்கையாளர்களுடன் இணைத்துள்ளது. மக்கள் இந்தத் தளத்தின் வாயிலாக அணுகுவதன்மூலம் மலிவு விலையில் உணவுகளைப் பெறுவதற்கு தள்ளுபடி விலையையும் அறவிக்கின்றன.  அதோடு வேலையில்லா மக்களுக்கு வேலைகளையும் வழங்கியுள்ளது.

Must Read: பேக்கரி உணவுகளை காலையில் உண்ண வேண்டாம்…

அதே சமயம் இந்தியாவில் செயல்படும் உணவு விநியோக செயலி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நிலைமை மோசமாக உள்ளது. ஏற்றுக்கொள்ள முடியாத தொழிலாளர் நடைமுறை களை இந்த நிறுவனங்கள் பின்பற்றுவதாக புகார் எழுந்துள்ளது. விரைவாக உணவை டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக சாலை விதிகளை மதிக்காமல் செயல்படுவதால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன. 

உணவுகளை அதிவிரைவாகவும், உடனடியாகவும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கா விட்டால், உணவு விநியோகம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, பணியில் இருந்து விலக்கப்படுகின்றனர்.
-ரமணி

#FoodDeliveryApps #Zomato #Swggy #FoodDelivery

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்





 


Comments


View More

Leave a Comments