அரசு அலுவலகத்தில் அசத்தலான உணவு திட்டம்


கொரோனா தொற்று நாளுக்கு நாள் பரவி வரும் சூழலில் அரசுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னையில், மாவட்டங்களில் உள்ள பலர் ஒர்க் ப்ரம் ஹோம் என்ற அடிப்படையில் பணியாற்ற முடிகிறது. ஆனால்,சிறு நகரங்களில் இது சாத்தியமில்லை.

இதனால், மயிலாடு துறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் பணியும் ஊழியர்களின் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு வித்தியாசமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

அலுவலகத்தில் ஒரு அறையை சமையல் அறையாக மாற்றியவர்கள், பொதுமக்களின் உதவியுடன் சமையல் பாத்திரங்களை பெற்று, தினமும் இயற்கையான சத்து நிறைந்த உணவு வகைகளை சமைத்து தங்களுக்குள் பகிர்ந்து உண்டு வருகின்றனர்.

குறிப்பாக அலுவலகத்தின் பெண் ஊழியர்கள் திறம்பட சமையல் பணியில் கலக்கி வருகின்றனர். மண்பாண்டத்தில் மதிய உணவு சமையல், காலை 11 மணி மற்றும் மாலை 4  மணிக்கு உடலுக்கு ஆரோக்கியமான ஆரோக்கியபானம், மிளகு பால் என்று தயார் செய்து கொடுக்கின்றனர். 

செய்தி, படம் நன்றி; விகடன் இணையதளம்


Comments


View More

Leave a Comments