ஒரே சிக்கன் 65 விதம், விதமான உணவாக மாறும் அதிசயம்…


சென்னை முதல் கன்னியாகுமரி வரை அரசு விரைவு பேருந்துகளில் பயணிக்கும்போது இடைவழி உணவகங்கள், பயண வழி உணவகங்கள், மோட்டல்கள் என அழைக்கப்படும் சாலை ஓர உணவகங்களில் பேருந்துகள் நிறுத்தப்படும். 

நீண்டதூரம் பயணிக்கும் போது, பசியோடு பயணிக்கக் கூடாது என்ற அக்கறையோடு நிறுத்தப்பட்டாலும், இத்தகைய உணவகங்களில் உண்டு பலர் புட் பாய்ஸன் காரணமாக பல உடல் நலக்கோளாறுக்கு ஆட்பட்டிருக்கின்றனர். உடல் நலக்கோளாறுகள் மட்டுமின்றி, உணவின் விலையும் தாறுமாறாக இருக்கும். 

Must Read: இந்தியாவில் 100 மில்லியன் மக்கள் நீரழிவு நோயால் பாதிப்பா?

இத்தகைய புகார்கள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தேசிய நெடுஞ்சாலைகளில் பிரபல பிராண்ட் உணவகங்கள் கடைகளைத் தொடங்கி இருக்கின்றன. எனவே, இப்போது நிலமை ஓரளவு பரவாயில்லை என்று சொல்லலாம். 

மோட்டலகளில் உணவு தரமாக இருக்கிறதா?

எனினும் கூட சில உணவகங்களில் இன்னும் இதே நிலை நீடிக்கத்தான் செய்கின்றது. சிக்கன் 65 மட்டும் பொறித்து வைத்துக் கொண்டு அதைக் கொண்டு விதம் விதமாக எப்படி உணவு வகைகளில் கலக்கி விற்கின்றனர் என்று முகநூல் பதிவு ஒன்றில் இளங்கோவன் முத்தைய்யா என்பவர் கூறியிருக்கிறார். அவருடைய பதிவு இங்கே. 

சிக்கன் ஃபிரைட் ரைஸ்னா என்னன்னு தெரியுமா?

ஃபிரைட் ரைஸ் செஞ்சு அதுல ஏற்கனவே பொரிச்சு வச்ச சிக்கன் 65 போன்லெஸ்ஸ பிச்சுப் போட்றனும்.

சிக்கன் நூடுல்ஸ்னா என்னன்னு தெரியுமா?

நூடுல்ஸ் ரெடி பண்ணிட்டு அதுல ஏற்கனவே பொரிச்சு வச்ச சிக்கன் 65 போன்லெஸ்ஸ பிச்சுப் போட்றனும்.

சிக்கன் செட்டிநாடுனா என்னன்னு தெரியுமா?

மசாலா ரெடி பண்ணி அதுல ஏற்கனவே பொரிச்சு வச்ச சிக்கன் 65 போன்லெஸ்ஸ லைட்டா பிச்சுப் போட்றனும்.

சிக்கன் ஃபிரைன்னா என்னன்னு தெரியுமா?

வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கருவேப்பிலைய வதக்கி, அதுல ஏற்கனவே பொரிச்சு வச்ச சிக்கன் 65 போன்லெஸ்ஸ பிச்சுப் போட்றனும்.

அட... இந்த சிக்கன் 65 னா என்னன்னு தெரியுமா?

எண்ணையை சூடு பண்ணி அதுல ஏற்கனவே பொரிச்சு வச்ச சிக்கன் 65 போன்லெஸ்ஸ போட்டு லைட்டா சூடு பண்ணி கொடுத்தரணும். "என்ன இருக்கு?" அப்படீன்னு மூணு தடவை கேட்டப்பவும் "சிக்கன் 65 இருக்கு" ன்னு ஒரே பதில் வந்தப்பவே யோசிச்சிருக்கணும்.

Must Read: இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ளவர்கள் தவறவிடக்கூடாத கட்டுரை…

இதுபோன்ற உணவகங்களின் அட்டகாசங்களுக்கு முடிவு கட்ட  இப்போது புதிய முயற்சியாக, தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துக்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளின் கைப்பேசிக்கு feed back link  அனுப்பி வைக்கப்படுகிறது. 

பயணிகள் இதனை பயன்படுத்தி உணவகங்களில் உள்ள குறை மற்றும் நிறைகளை தெரிவிக்கலாம். இந்த feed back link மூலம் பெறப்படும் புகார்கள் மீது போக்குவரத்து துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னாவது இந்த உணவகங்களின் தரம் மேம்படும் என நம்பலாம். 

#motels #highwayhotels #highwayhotelfood #highwayrestaurant

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்


Comments


View More

Leave a Comments