எலும்பு ஆரோக்கியத்துக்கு இந்த ஆறு விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்…


நமது அன்றாட செயல்பாடுகளை தடங்கல் இன்றி செய்வதற்கு உடலில் உள்ள எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம். எலும்புகளின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு முறையான உணவுப்பழக்கங்கள் அவசியம். கீழ் கண்ட உணவு பொருட்களை சாப்பிடாமல் தவிர்த்தால் எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். 

1.பெரும்பாலான குளிர்பானங்களில் சுவைக்காக அதிக சர்க்கரை, காஃபின் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. எனவே இத்தகைய குளிர்பானங்களை தவிர்ப்பது நலம். அதிக சர்க்கரை,காஃபின் உள்ள பானங்களால் எலும்பின் வலு குறைகிறது. 

Must Read: மகிழ்ச்சி ஹார்மோன்கள் அதிகரிக்கும் உணவுகள் என்ன தெரியுமா?

2.காஃபின் குளிர்பானங்களில் மட்டுமின்றி, நாம் அடிக்கடி பருகும் தேநீர்,காபி போன்றவற்றிலும் அதிகம் உள்ளது. காஃபின் நிறைந்த பானங்களை குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். சிறுநீரில் கால்சியம் அதிக அளவு வெளியேறினால் எலும்பின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. 

3.அதிகபட்டியான இறைச்சியின் மூலம் கிடைக்கும் புரத உணவுகளை சாப்பிடுவதும் ஆபத்து என்று சொல்கின்றனர்.  இறைச்சியில் உள்ள புரதங்கள் சிறுநீரில் கால்சியத்தை வெளியேற்றிவிடும் என்பதால் அது உடல் எலும்பின் வலுவை குறைத்து விடும். எனவே அளவோடு இறைச்சி உண்பது நலம். 

ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு

 

4.சிகரெட் பிடிப்பவர்களுக்கு  கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். கால்சியம் உடலில் சேருவதை சிகரெட்டில் உள்ள  நிகோடின் பாதிக்கிறது. இதனால் உடலில் எலும்பின் வலு குறையும். 

5.உணவில் எப்போதும் அளவான உப்பு, அளவான சர்க்கரை பயன்படுத்த வேண்டும். அதிக உப்பு, அதிக இனிப்பு இரண்டுமே  கால்சியத்தை  உடம்பில் இருந்து கரைத்து விடும். . 

6. கணினி முன்பு உட்கார்ந்தபடியே பணியாறுவதால் கால்சியம் சத்து குறைகிறது. நடைபயிற்சி செய்வதன் மூலம் எலும்பை வலுப்படுத்தலாம். 

-ரமணி

#6PointsForBoneHealth, #HealthyBoneFoodHabits, #FoodToAvoidUnHealthyBone

 
 

Comments


View More

Leave a Comments