பித்த குமட்டல் தீர்க்கும் களா செடி
நமது அருகாமையில் வளரும் மூலிகைகளைக் கொண்டு நமது உடல் நலனை பேணி பாதுகாக்க முடியும். அந்த வகையில் மூலிகைகளின் நன்மைகள் குறித்தும் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ஆதனூரை சேர்ந்த திரு.ASNசாமி அவர்கள் தொடர்ந்து நமக்கு வழங்கி வருகிறார். இன்று களாசெடி மற்றும் கவிழ் தும்பை ஆகியவற்றில் உள்ள நன்மைகள் குறித்து அவர் கூறும் தகவல்களைப் பார்க்கலாம்.
களாசெடி
முட்கள் உள்ள குறும் செடி வெண்மையான பூக்களையும் சிவப்பு நிற காய்களையும் கருப்பு பழங்களையும் கொண்டது. பூவும் காயும் புளிப்பு சுவை உடையவை. பூ காய் பழம் வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை
Also Read:உடல் நஞ்சை தீர்க்கும் கரு ஊமத்தை மாதவிடாய் வயிற்று வலி தீர்க்கும் கல்யாண முருங்கை
காய் பழம் ஆகியவை பசி மிகும் வேர் தாதுக்களின் வெப்பு தணிக்கும் சளியை அகற்றும் மாதவிலக்கைத் தூண்டும் காயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாயாக உணவுடன் கொள்ள பசியின்மை சுவையின்மை ரத்தபித்தம் தணியாத தாகம் பித்த குமட்டல் ஆகியவை தீரும்
வேரை உலர்த்தி பொடித்து சமன் சர்க்கரை கலந்து 3 கிராம் காலை மாலை சாப்பிட்டு வர பித்தம் சுவையின்மை தாகம் அதிக வியர்வை தீரும் களா பழத்தை உண்ட பின் சாப்பிட உணவு விரைவில் செரிக்கும்.
தூய்மையான பூவை நல்லெண்ணெயில் இட்டு பூ மிதக்கும் வரை வெய்யிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளிகள் நாள்தோறும் கண்ணில் விட்டு வர கண் களில் உள்ள வெண்படலம் கரும்படலம் இரத்தப் படலம் சதை படலம் ஆகியவை தீரும் 50 கிராம் வேரை நசுக்கி அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி காலை மாலை 50 மில்லியாக கொடுக்க மகப்பேறின் போது ஏற்படும் கருப்பை அழுக்குகள் வெளிப்படும்.
கவிழ் தும்பை
தும்பை இலை வடிவில் சொரசொரப்பான வெளிரிய முழுமையான இலைகளையும் தனித்த வெளிர் நீல அல்லது வெளிர் சிவப்பு நிறமுடைய கவிழ்ந்து தொங்கும் மலர்களை உடைய சிறு செடி.
Also Read:குளிர்காலத்திற்கு ஏற்ற இஞ்சி, இலவங்கப்பட்டை பால்
தமிழகமெங்கும் சாலையோரங்களில் தானாக வளரக்கூடியது செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது கவிழ் தும்பை இலை குறுவை அரிசி சம அளவு இடித்து மாவாக்கி பனைவெல்லம் கலந்து 10 கிராம் அளவாகக் காலை மாலை மூன்று நாள் உட்கொள்ள பெரும்பாடு தீரும்.
50 கிராம் சமூலத்தை சிதைத்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 250 மில்லி ஆகுமாறு காய்ச்சி வடிகட்டி காலை மாலை 125 மில்லியாக சாப்பிட்டு வர சீதபேதி மூட்டுவலி பால்வினை நோயால் ஏற்படும் கட்டிகள் ஆகியவை குணமாகும் இலையை தேன் விட்டு வதக்கி நீரில் கொதிக்கவைத்து காலை மாலை சாப்பிட்டு வர சூதக வலி தீரும்
நன்றி; ASNசாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை ஆதனூர் திருவண்ணாமலை மாவட்டம் 9442311505
#KavilThumbai #KalaHerbal #PattiVaithiyam
Comments