மதிய உணவில் ரசம் சாப்பிடுவது முக்கியம் ஏன் என்று தெரியுமா?


 

நமது பாரம்பர்ய உணவு முறையின்படி வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி ஆகியவற்றை உணவில் ஏதோ ஒரு வகையில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டு்ம். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு வகையில் உடல்நலத்துக்கு நன்மை பயக்கின்றன.

இந்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு உணவு வகையை நாம் செய்ய முடியும். சாம்பாருக்கு அடுத்து எல்லோராலும் விரும்பப்பபடும் உணவு ரசம். ரசத்தில் மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களும் இடம் பெறும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒன்பது வகையான சத்துமிக்க பொருட்களும் ஒரே ஒரு மெனுவில் இடம் பெறுவது என்பது மிகவும் சிறப்புக்கு உரியது.  

ரசத்திலும் கூட பல வகைகள் உள்ளன என்பது தெரியுமா. நாம் சாதாரணமாக வீடுகளில் வைப்பது மிளகு ரசம் அல்லது புளி கரைசல் ரசம் ஆகியவை மட்டும்தான். ஆனால், ரசத்தில் அது சேர்க்கப்படும் பொருளைக் கொண்டு விதவிதமான பெயரில் அழைக்கலாம். எலுமிச்சை ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம், பருப்பு ரசம், தக்காளி ரசம்  என்று பலவிதமான சுவைகளில் ரசத்தைத் தயாரிக்கலாம்.

ரசத்தில் பொருட்களால் ரசம் ஆரோக்கியமான  உணவாக இருக்கிறது. அதில் சேர்க்கப்படும் பொருட்கள் ஜீரண சக்திக்கு உதவுகின்றன. வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது ரசம் போக்கிவிடுகிறது.

.

நாம் ரசம் என்று குடிப்பதைத்தான் வெளிநாட்டினர் சூப் என்று குடிக்கின்றனர். இப்போதுதான் வெளிநாடுகளுக்கு இணையாக பல விதங்களில் ரசம் கிடைக்கிறது. ரசம் சாப்பிட்டால் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும். ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகளை குணப்படுத்துகிறது..

நரம்புகள் சாந்தடைவதால் நோய்கள் குணமாகின்றன. ஆண்மை அதிகரிக்கிறது. அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது. புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.

கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், உடல் சூடு தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது. புது மணத்தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கைக்கு கொத்துமல்லிக் கீரையும், கொத்துமல்லி சேர்ந்த ரசமும் சுவையூட்டுகின்றன. மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது.

வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது. எனவே கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது. கறி வேப்பிலையால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது.

ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது. தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும், ‘சி’ வைட்டமின் களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது. தலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன. ஆண்மைக்குறைவையும் போக்குகிறது. மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும் குணமாக்கி, குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது இஞ்சி. ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது.

தசைவலியும், மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது.ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது.வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள்.மழைக்காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம்.

வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலிய வற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும்..‌எனவே, ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


Comments


View More

Leave a Comments