இந்த 5 அறிகுறிகள் உங்கள் உடலில் நீர் சத்து இல்லை என்பதற்கான எச்சரிக்கைகளாகும்
நம் உடலில் ஏற்படும் நாள்பட்ட நீர் இழப்பு என்பது நீண்ட காலத்திற்கு உடலில் இருந்து அதிகப்படியான நீரை இழப்பது மட்டுமல்லாமல், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் முக்கிய தாதுக்களின் இழப்பும் ஆகும்.
நீர் சத்து என்பது மனித உடலுக்கு எளிமையாக கிடைக்கக்கூடிய ஒன்று அதே சமயம் முக்கியமானதாகும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கிய பகுதியாக உடலில் நீர்சத்து நிலைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
சில வல்லுநர்கள் கருத்தின்படி பெண்கள் 16 டம்ளர் (3.5 லிட்டர்) தண்ணீரும், ஆண்கள் 11 (2.5 லிட்டர்) டம்ளர் குடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
நம் உடலில் நீர் சத்து மிகவும் முக்கியம் என்று நமக்கு தெரிந்தாலும் கூட நம் அருகில் இருக்கும் தண்ணீரை எடுத்து அடிக்கடி குடிப்பதை மறந்து விடுகின்றோம். இதனால்தான் நம் உடலில் நீர் இழப்புக்கு வழிவகுக்கிறது. நீர் இழப்பு நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால் பல்வேறு உடல் நலக்குறைபாடு பிரச்னைகளுக்கு வழி வகுக்கிறது.
ஒரு நபர் ஒரு நாளில் உடலில் இருந்து இழக்கும் நீரின் அளவை ஒப்பிடும்போது, அந்த நபர் குறைந்த அளவே நீரை எடுத்துக் கொள்ளும்போது அது நாள்பட்ட நீர் சத்து இழப்புக்கு வழிவகுக்கிறது.
இதையும் படியுங்கள்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஐந்து முக்கியமான காய்கறி, பழங்கள்...
மனித உடலில் நாள்பட்ட நீர் இழப்பின் தாக்கம்:
உடலில் நாள்பட்ட நீர் இழப்பு என்பது நீண்ட காலத்திற்கு உடலில் இருந்து அதிகப்படியான நீரை இழப்பது மட்டுமல்லாமல், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் முக்கிய தாதுக்களின் இழப்பும் ஆகும். நீர் சத்து, எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் தாதுக்களின் சரியான சமநிலை நமது உடல் ஒழுங்காக செயல்பட உதவுகிறது. நீர் சத்து பற்றாக்குறையில் காரணமாக தசைப்பிடிப்பு, சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் பல பொதுவான ஆனால் தொடர்ச்சியான பிரச்சினைகளை ஏற்படக்கூடும். இது அதிகப்படியான, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் அல்லது நினைவு சக்தி இழப்பு போன்ற வடிவத்தில் வெளிப்படுகிறது.
நீர் சத்து இழப்பை தொடர்ந்து கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்துதல், சிறுநீரகங்கள் வழியாக கழிவுகளை அகற்றுதல், ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை பராமரித்தல் மற்றும் ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளையும் மோசமாக பாதிக்கும்.
நாள்பட்ட நீரிழப்பின் அறிகுறிகள்:
நம் உடலில் நீர் இழப்பு ஏற்படும்போது நம் உடல் பொதுவாக நமக்கு அளிக்கும் சமிக்ஞைகளை முதலில் நாம் அடையாளம் காண வேண்டும்.
1. வாய் வறண்டு போதல் அல்லது துர்நாற்றம்:
உமிழ்நீர் சுரப்பிகள் பல ஆன்டிபாக்டீரியாக்களை உருவாக்குகின்றன. நம் உடல் நீர் சத்தை இழந்திருக்கும்போது உமிழ்நீரை உற்பத்தி செய்வதை நிறுத்துகிறது. உமிழ்நீர் பற்றாக்குறை காரணமாக வாயில் வறட்சி மற்றும் உதடுகளில் விரிசல் ஏற்படுத்துகிறது. துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
2. தோல் வறண்டு போதல் அல்லது சிவப்பாக மாறுதல்
உடலில் நீர் இழப்பு நிகழும்போது நம் உடல் ஈரப்பதத்தை இழக்கிறது, இது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துவதுடன் தோலில் சிவப்பு நிறத்தை உருவாக்கும்.
3. தவறான புரிதல்
நீர் சத்து இல்லாததற்கு பெரும்பாலும் கல்லீரல் போன்ற சில உறுப்புகளின் ஆற்றல் பற்றாக்குறை என்று தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. பசி என தவறாக புரிந்து கொண்டு சாக்லேட்டுகள், சிப்ஸ்களை சாப்பிடுவதற்கு பதிலாக எலக்ட்ரோலைட்டுகளால் நிரம்பிய நீர் சத்து நிறைந்த பானத்தை குடிக்க வேண்டும்.
4. ஒற்றைத் தலைவலி அல்லது தொடர்ச்சியான தலைவலி:
நாள் முழுவதும் நாம் நீர் சத்தை இழக்கும்போது, தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி கூட ஏற்படுகிறது.
5. சிறுநீர் சோதனை:
ஆழமான மஞ்சள் நிறத்தில் சிறுநீர் இருந்தால், நீங்கள் போதுமான நீர் சத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்பதை குறிக்கும் அறிகுறியாகும்.
நாள்பட்ட நீர் இழப்பைத் தவிர்க்க மிக எளிய மற்றும் பயனுள்ள வழி, உடலில் இழந்த நீர் சத்தை நிரப்புவதுதான். வெறும் குடிநீர் மட்டுமின்றி, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், சோடியம் மற்றும் குளோரைடு போன்ற தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிரம்பிய திரவங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவை தவிர, பழங்கள், கொட்டைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் மற்றும் பிற ஆரோக்கியமான விருப்பங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். இது உங்கள் உடலை நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களுடன் ரீசார்ஜ் செய்யும்.
நீர் சத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து உடலில் நீர் சத்தை உரிய முறையில் பராமரித்தால் நம் வாழ்க்கையையும் உடலும் திறம்பட இருப்பதை உறுதி செய்ய முடியும். மேலும் நாம் நம் உடலை நீர் சத்துக் கொண்டதாக வைத்திருப்பதன்வாயிலாக பல எண்ணற்ற நோய்களை தவிர்க்க முடியும்.
கோவிட் -19 உலகை அழிக்கும் சூழலில் முன்பை விட இப்போது நமது நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவத்தை உணர்வதன் வாயிலாக தொற்றுநோய்க்கு எதிரான போரில் நம் உடல் நம்மை காக்கும்.
ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவது மிகவும் முக்கியம். எனவே ஆரோக்கியமான, நன்மை நிறைந்த வாழ்க்கைக்கு தண்ணீர் மிகவும் முக்கியம் என்பதை உணருங்கள்.
-பா.கனீஸ்வரி
#Dehydration # Hydration # DehydrationAffectsHealth #AvoidDehydration #DrinksWater
Comments