ரத்த சோகை; தீர்வுகாண 5 முக்கிய விஷயங்கள்…
பரவலாக பலருக்கு ரத்தசோகை நேரிடுவதற்கு ஃபோலிக் ஆசிட் பற்றாக்குறை, இரும்பு சத்து குறைபாடு ஆகியவைதான் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ரத்த சோகை உள்ளவர்கள் தங்களுடைய உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றங்களை செய்தால் தீர்வு கிடைக்கும். அதோடு மருத்துவ ஆலோசனையும் முக்கியம்.
1.இரும்பு சத்து அதிகம் உள்ள இறைச்சி, கீரை வகைகள், பேரிச்சம் பழம், மீன் ஆகிய உணவுகளை உண்ணலாம்.இரும்பு சத்து உணவுகளை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டால் பலன் கிடைக்காது.
2. இரும்பு சத்து உணவுப் பொருட்களுடன் வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள் இரும்புச்சத்தை உங்கள் உடல் உட்கிரகிக்க உதவி செய்யும்.
3. மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம் ஆகிய பழங்களும் ரத்த சோகையில் இருந்து விடுபட உதவி செய்யும். இந்த பழங்கள் சாப்பிடுவதால் உங்கள் உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகரிக்கும்.
4 அதே போல ரத்த சோகைக்கு தீர்வு கிடைப்பதற்கு புரோபயோடிக்குகள் உதவும். இவை நன்மை தரும் பாக்டீரியா உள்ளடக்கத்தை அதிகரிக்கும். இது நமது செரிமான சக்தி திறன் பட வேலை செய்யவும் உதவும். இரும்பு சத்தின் அளவை அதிகரிக்க உதவும். தயிரை தினமும் உட்கொள்வது சிறந்தது.
5. ரத்த சோகைக்கு தீர்வு காண பாதாம் பருப்பு உங்களுக்கு உதவும். அன்றாட உணவில் பாதாம் சேர்த்துக் கொள்ளலாம். பாதாமில் ஆரோக்கியமான கொழுப்பு, மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இரத்த சோகை தீர்வு கிடைக்க 4முதல் 5 பாதாம் பருப்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதன் தோளை நீக்கிவிட்டு உண்ண வேண்டும்.
#5PointsForAnemia #CureFromAnemia #AnemiaFoods
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
Comments