பச்சை மிளகாய் உண்பதால் இவ்வளவு நன்மைகளா?


பச்சைமிளகாய் காரம் நல்லது 

பச்சை மிளகாயில் பல சத்துகள் உள்ளன 

பச்சை மிளகாய் உடல்நலனுக்கு ஏற்றது 

நீங்கள் காரமான உணவை விரும்பி உண்பவர்களாக இருந்தால் பச்சை மிளகாயையும் விரும்புவீர்கள் என்று தெரியும். பச்சை மிளகாயை உணவுடன் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்தால்  நீங்கள் அவற்றை இன்னும் அதிகமாக நேசிக்கத் தொடங்குவீர்கள்.

பச்சை மிளகாயானது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த உடல் நலத்துக்கு நல்லதாகும். பச்சை மிளகாயில் உள்ள ரசாயன கலவைகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. 

Also Read: வெளியானது கபசுரகுடிநீரின் இரண்டு ஆய்வுகள்…

அது மட்டுமல்லாமல், காயமடையும் போது ரத்தப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது. எனவே சிறிய அளவிலாவது பச்சைமிளகாய் காரத்தை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. 

சளி தொல்லையில் இருந்து விடுபடலாம்

பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் மூக்கில் சீரான இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. எனவே மூக்கில் ஏற்படும் சளி மற்றும் சைனஸ் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவுகிறது. இது தவிர உடல் வலியை கட்டுப்படுத்துகிறது. 

பச்சைமிளகாய் வலி நிவாரணியாக செயல்படுகிறது

மிளகாயை நுகரும்போது அதில் இருந்து வெளியாகும் வெப்பம் வலி நிவாரணியாக செயல்படுகிறது. வலியைக் கட்டுத்தும் என்சைம்களை அதிகரிக்கும் எண்டோர்பின் எனப்படும் ரசாயனங்களையும் பச்சை மிளகாய் கொண்டுள்ளது. இது மனிதனின் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. 

சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துகிறது

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பச்சை மிளகாய் பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகின்றன. மேலும் பச்சை மிளகாயில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது பச்சை மிளகாயை குளிர்ச்சியான இடத்தில் வைத்திருக்க வேண்டும். வெப்பம், ஒளி மற்றும் காற்றில் பச்சை மிளகாயின் ஊட்டச்சத்துக்கள் இருக்காது. . 

இரும்பு சத்து அதிகம் உள்ளது 

பச்சை மிளகாயில் இயற்கையாகவே இரும்பு சத்து அதிகம் உள்ளது. இதனால் இரும்புச்சத்து குறைபாடுள்ளவர்களுக்கு பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது 

பச்சை மிளகாய் கண்பார்வைக்கும் நல்லது

பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வது கண்பார்வைக்கும் நல்லது.. பச்சை மிளகாயில் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளன. அனைத்து வகையான தோல் நோய்களுக்கும் பச்சை மிளகாய் கலந்த உணவு நல்லது. 

Also Read: நொறுங்கத் தின்போம்

பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது

பச்சை மிளகாயில் இதய அமைப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் பீட்டா கரோட்டின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்டை அதிக அளவில் கொண்டுள்ளது. மேலும் பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ காரணமாக எலும்புகள், பற்கள் மற்றும் சளி சவ்வுகள் வலுவுடன் இருக்கும். ஏதேனும் வெட்டு அல்லது காயம் காரணமாக உங்களுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டால், பச்சை மிளகாயை உட்கொள்ளத் தொடங்குங்கள், ஏனெனில் அதில் வைட்டமின் கே அதிகம் இருப்பதால் ரத்த உறைவுக்கு உதவுகின்றன.

-ஆகேறன் 

#BenefitsForGreenChillies  #GreenChilliesGoodForHealth  #EatGreenChillies  

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai

 


Comments


View More

Leave a Comments