கல்லீரலை காக்கும் இந்த மூன்று உணவுகள் மிகவும் முக்கியம்…


நமது உடலில் இதயத்தைப் போலவே கல்லீரலும் முக்கியமான உறுப்பாகும்.  நாம் உண்ணும் உணவு கல்லீரல் மூலமாகத்தான் செரிமானம் ஆகிறது. எனவே கல்லீரல் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகும். கல்லீரலில் உணவு குளுக்கோஸ் ஆக உருவாக்கப்படுகிறது. உடலின் நச்சுத்தன்மை நீக்கப்படுகிறது. உணவை முறையாக செரிப்பதற்கு உதவுவதுடன், நுண்ணூட்ட சத்துகளையும் கல்லீரல் சேமித்து வைக்கிறது. 

Must Read: காய்ச்சல், சளி குணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுங்கள்…

கல்லீரல் செயல் இழப்பு என்பது கல்லீரல் நோய்களை உருவாக்கும். வளர்சிதை மாற்றத்தில் கோளாறு ஏற்படும். டைப் 2 சக்கரை நோய் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, கல்லீரலைப் பாதுகாப்பதற்கான உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம். 

ஓட்ஸ்

ஓட்ஸ் உடணவுகள் கல்லீரலைப் பாதுகாக்க உதவுகின்றன. உணவு செரிப்பதற்கு நார் சத்து என்பது மிகவும் முக்கியமாகும். ஓட்ஸில் நார் சத்து அதிகமாக உள்ளது. தவிர ஓட்ஸில் உள்ள குறிப்பிட்ட சில நார்சத்துகள் கல்லீரலைப் பாதுகாக்க உதவுகின்றன. 

கல்லீரலை காக்கும் உணவுகள்

பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஓட்ஸ் தானியத்துக்குப் பதில் முழு ஓட்ஸ் அல்லது உடைக்கப்பட்ட ஓட்ஸ் உபயோகிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. முழு ஓட்ஸ், உடைக்கப்பட்ட ஓட்ஸில் இருக்கும் நார்சத்துகளை விட பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஓட்ஸ் தானியத்தில் நார் சத்துகள் குறைவு.

பூண்டு

பூண்டு பல்வேறு பலன்களைக் கொண்டது என்பது நமக்குத் தெரிந்த ஒன்று. கல்லீரலைப் பாதுகாப்பதற்கும் பூண்டு சிறந்த உணவாகும். அதீத கொழுப்பு காரணமாக உடல் குண்டாவது அதிகரிக்கும். இதனால் கல்லீரலும் பாதிப்பு ஏற்படும்.  கொழுப்பு கல்லீரல் நோயை தடுக்க பூண்டு மிகவும் உதவியாக இருக்கிறது.உணவில் அதிக அளவு பூண்டை உபயோகிப்பது நல்லது.

திராட்சை

திராட்சை, திராட்சை பழரசம், திராட்சை விதை ஆகியவற்றில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை கல்லீரலை பாதுகாப்பதற்கு மிகவும் முக்கியமானதாகும். திராட்சை உண்பதால் கல்லீரல் வீக்கம் ஆவது தடுக்கப்படும், கல்லீரல் பாதிப்புகளையும் தடுக்க முடியும்.

-பா.கனீஸ்வரி 

#Healthyliver,  #FoodsForLiverHealthy , #CureForLiver

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments