இயற்கைக்கு மாறும் இந்தியன் ரயில்வே....


புறநகர் மின் ரயிலிலோ அல்லது விரைவு ரயிலிலோ பயணிக்கும் போது ரயில் பாதையை ஒட்டி நிறைய பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்கள், பிளாஸ்டிக் தட்டுகள் எல்லாம் கிடப்பதை நாம் பார்க்கலாம். ரயிலில் பயணிக்கும் பயணிகள் ரயிலில் தரும் உணவுகளை உண்டு விட்டு அப்படியே பிளாஸ்டிக்கை வெளியே தூக்கிப் போடுவார்கள். நாமும் அப்படித்தான் செய்திருப்போம். இனி அது போன்று செய்யத் தேவையில்லை.

ஆம் இனிமேமேல் ரயில்வே துறை சார்பில் ரயில் நிலையங்கள், ரயில்களில் மண்பாண்டங்களில் உணவுப் பொருட்களைக் கொடுப்பது என முடிவு செய்திருக்கின்றனர். முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 400 முக்கிய ரயில் நிலையங்களில் தேநீர், டிபன், சாப்பாடு ஆகியவை மண்பாண்டங்களில் வழங்கப் பட உள்ளன. 400 ர யில் நிலையங்களிலும் மண்பாண்டங்களில்தான் தேநீர் வழங்கப்படுகிறது. இது அனைத்து ரயில்நிலையங்களிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இதே போல டிபன், சாப்பாடு ஆகியவையும் விரைவில் மண்பாண்டங்களில் வழங்கப்பட உள்ளன. ரயில்வே இயற்கைக்கு மாறுவதை நாம் வரவேற்போம்.


Comments


View More

Leave a Comments