கோவையில் 9ஆம் தேதி நடைபெறும் சந்தை உள்ளிட்ட 3 நிகழ்வுகளை மறக்காதீர்
கோயம்புத்தூரில் வரும் 9ஆம் தேதி இயற்கை வழி வேளாண் மக்கள் & உற்பத்தியாளர்களின் நேரடி சந்தையின் சார்பில் நம்மஊரு சந்தை நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கிராஸ்கட் சாலை , மேம்பாலம் அருகில், பவர்ஹவுஸ் பேருந்து நிறுத்தம், காந்திபுரம்,கோயம்புத்தூர் என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
இந்த சந்தையில் பாரம்பரிய அரிசிவகைகள் சீர்தானியங்கள்,மரசெக்கு எண்ணெய் வகைகள்,நாட்டுச் சர்க்கரை, பனங் கருப்பட்டி, கற்கண்டு.குழம்பு பொடி வகைகள்.மளிகைப் பொருட்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், நாட்டுக் கோழி மற்றும் வாத்து முட்டைகள் ஆகியவை கிடைக்கும்.
Must Read: தமிழ்நாட்டில் அதிகம் அறியப்படாத சுவை மிக்க உணவகங்கள்…
இது தவிர குழந்தைகளுக்கான உணவு வகைகள், மரபு இனிப்பு வகைகள், முறுக்கு வகைகள், மூலிகை தேநீர் பொடி மற்றும் ஊறுகாய் வகைகள் வீட்டு வைத்திய மூலிகைப் பொடி வகைகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பருத்தி உள்ளாடைகள்,அணையாடைகள் ஆகிய பொருட்களும் சந்தைப்படுத்தப்படுகிறது.
உடல் சுத்தப்பொடிகள்,வெட்டி வேர்பொருட்கள்,சுத்தப்படுத்திகள்,தேன் மெழுகில் செய்த சோப்புகள்,மருந்துப்பொருள்கள்,உடல்பொலிவு பொருட்கள் (Cosmetics), மண்பாண்டப் பொருட்கள்,மர விளையாட்டுப் பொருட்கள்,மூங்கில் பயன்பாட்டு பொருட்கள்,பனை ஓலைப் பொருட்கள், சணல் பைகள், ஜோல்னா பைகள், துணிப்பைகள் (Cotton Bags) ஆகியவையும் சந்தையில் கிடைக்கும்
சாப்பிட மதிய உணவு, அருந்த மலர் மற்றும் கனிச்சாறு, நீரா பானம். என இன்னும் ஏராளமான இயற்கைக்கு நெருக்கமான அனைத்து பொருட்களும் நம்ம ஊரு சந்தையில் கிடைக்கும். இத்துடன் குழந்தைகளுக்கான விளையாட்டுகளும், கதைகளும் காத்திருக்கின்றன.
அனைவரும் வருக!!, அனுமதி இலவசம். மேலும் விவரங்களுக்கு 9942118080, 9500125125 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். எண்ணெய் வாங்க பாத்திரங்களும், பொருட்கள் வாங்க துணிப்பையும் கொண்டு வாங்க.(ற்றிலுமாக ஞெகிழி இல்லா சந்தை இது.
சிறுதானியசிற்றுண்டி தயாரிப்பு பயிற்சி
செஞ்சோலை நடத்தும் சிறுதானியசிற்றுண்டி தயாரிப்பு பயிற்சி வரும் 09 ஆம் தேதி ஞாயிறு அன்று காலை 09.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைடபெறும்.சமையல் நிபுணர் திருமதி: நாகரத்தினம் அவர்கள் பயிற்சி அளிக்க உள்ளார்.
பயிற்சியில் சிறுதானியங்கள், மரபு அரிசி வகைகளில் கூழ் வகைகள் பனிக்கூழ், பால் பானம் தயாரித்தல் (Ice cream, Milkshake, Falooda) ஆகியவை குறித்து கற்றுத்தரப்படும்.
இவை தவிர இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சிற்றுண்டி வகைகள் (No added chemicals), (Naturally made desserts for kids)உ டலுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் வீட்டிலேயே Icecream, milkshake, falooda செய்ய கற்றுக்கொள்வோம்.சிற்றுண்டி வகை உணவுகளை வீட்டிலேயே தயாரித்து இக்கோடை காலத்தை கொண்டாடுவோம்
பிஸ்கட் தயாரிப்பு பயிற்சி
செஞ்சோலை நடத்தும் பிஸ்கட் தயாரிப்பு பயிற்சி 9ஆம் தேதியன்று மதியம் 02.00 மணி முதல் 03.30 மணி வரை நடைபெறும்.அகத்தியம் இயற்கை வாழ்வியல் மையத்தின் திரு.தீபக் பயிற்சி அளிக்கிறார்.
Must Read:உடற்கட்டமைப்புக்கான குறுக்கு வழி ஸ்டீராய்டுகள் ஆபத்தானவை
இந்த பயிற்சி முகாமில் சிறுதானியங்கள், மரபு அரிசி வகைகளில் பிஸ்கட் தயாரித்தல், பேக்கிங் பவுடர் & மைதா இல்லாமல் தயாரிக்கப்படும் பிஸ்கேட். (No Maida & No Baking Powder) ஆகியவை குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிற்றுண்டி வகையில் பிஸ்கட் தவிர்க்க இயலாததாக உள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் வீட்டிலேயே பிஸ்கட் செய்ய கற்றுக்கொள்வோம்.தொழில் முறையாக செய்ய விருப்பமுள்ளவர்களும் கலந்துகொள்ளலாம்.
இந்த இரண்டு பயிற்சியிலும் பங்கேற்பதற்கு முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய 7904440266 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இரண்டு பயிற்சிகளும் செஞ்சோலை இயற்கைவழி வேளாண் பண்ணை,கலங்கல் சாலை, சூலூர், கோவை என்ற முகவரியில் நடைபெற உள்ளன. பயிற்சி நடைபெறும் இடத்துக்கான கூகுள் வரைபடத்தை காண; https://maps.app.goo.gl/9GeKqoa8iviNCCai8
#nammalvarbirthday #summerfoodtraning #organicfarming #agrieventskovai
TRENDING; மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்கு, நம்மாழ்வார் பிறந்தநாள், தேன்சாப்பிடும் முறை
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments