உங்களுடைய சிறுநீரகத்தின் ஆரோக்கியத்துக்கு இந்த உணவுகள் முக்கியம்


நமது உடலானது இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல் ஆகிய முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகளைப் பொறுத்து ஆரோக்கியமாக  இருக்கிறது. இந்த உடல் உறுப்புகள் நமது உடலின் மெட்டபாலிக் எனப்படும் வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளுக்கு முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. இந்த முக்கிய உடலின் பாகங்கள் இயங்குவதில் கோளாறு ஏற்பட்டால் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.

அந்த வகையில் நம் உடலில் உள்ள சிறுநீரகம், நம் உடல் கழிவுகளை அகற்றப் பயன்படுகிறது. ரத்தத்தில் இருந்து தண்ணீர், உப்பு ஆகியவற்றை வடிகட்டி அதனை சிறுநீராக வெளியேற்றுகிறது. ரத்த அழுத்த த்தை நிர்வகிப்பதில் சிறுநீரகத்துக்கு முக்கிய பங்கு உண்டு. ஆரோக்கியமான சிறுநீரகமானது உங்கள் உடலின் உப்பு, பொட்டாசியம் போன்ற தாதுக்களை சமநிலைப்படுத்துகின்றன. உங்கள் உடலுக்குத் தேவையான நீர் சத்தையும் நிர்வகிக்கின்றன.

எனவே சிறுநீரகம் நன்றாக செயல்படுவதற்கான உணவுகளை நீங்கள் உண்ண வேண்டியது அவசியம். அப்போதுதான் சிறுநீரகம் பழுதடைவதில் இருந்து பாதுகாக்க முடியும்.புரோட்டின், கலோரிகள், வைட்டமின், தாதுக்கள் போன்றவற்றை சரியான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறுநீரகம் ஆரோக்கியத்துக்கு முக்கியமான உணவுகளைப் பார்க்கலாம்.

தண்ணீர்

உடலுக்கு முக்கியம் தேவையான பானம் இது. சிறுநீரகம் நம் உடலில் இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்ற தண்ணீரை ஒரு வடிகட்டியாகப் பயன்படுத்துகிறது. பின்னர் அது சிறுநீராக உற்பத்தியாக வெளியேறுகிறது. எனவே ஆரோக்கியமான சிறுநீரகத்துக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். எப்போதெல்லாம் தாகம் எடுக்கின்றதோ அப்போதெல்லாம் தண்ணீர் குடிக்கலாம். உங்கள் உடலில் கூடுதல் உப்பு சேருவதை தவிர்க்க தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்சத்து அதிகம் இருக்கிறது. கொழுப்பை குறைக்கிறது. குளுக்கோஸ் அளவையும் கட்டுப்படுத்துகின்றது. ஆப்பிளின் தோலானது ஆன்டிஆக்சிடன்ட் கொண்டது. இது மூளை செல்களையும் பாதுகாக்கின்றது. ஆப்பிள் உங்கள் சிறுநீரகத்துக்கு மிகவும் ஏற்றது.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட மீன் உணவுகள்

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவுகள் நமது உடலுக்கு அவசியமானவையாகும். இதனை நம் உடல் உருவாக்குவதில்லை. எனவே இதனை வெளி உணவுகள் வாயிலாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும். சால்மோன், டியூனா உள்ளிட்ட இதர மீன் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கிறது. ர த்த த்தில் கொழுப்பு அளவை இவை குறைக்கின்றன. எனவே கொஞ்சம் ரத்த அழுத்தம் குறையும். கட்டுப்பாடான ரத்த அழுத்தம் என்பது உங்களுடைய சிறுநீரகத்துக்கு அவசியமானதாகும். ஆனால், இந்த உணவை எடுக்கும் முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்.

கிரான்பெர்ரி

இந்த வகை பெர்ரி பழமானது சிறுநீர்ப்பை சுவரில் ஒட்டும் பாக்டீரியாவைத் தடுப்பதன் மூலம் சிறுநீர்ப்பை நோய்த்தொற்றுகளுக்கு எதிராக செயல்புரிகிறது. எனவே இந்த பழம் சிறுநீரக ஆரோக்கியத்துக்கு முக்கியமானதாகும்.

 சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் குறைந்த பாஸ்பரஸ் மற்றும் குறைந்த அளவு பொட்டாசியம் உள்ள உணவுகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொண்டால் சிறுநீரக பாதிப்புகளை தவிர்க்கலாம்.

-பா.கனீஸ்வரி

#FoodsAreImportantForKidney  #KidneyHealthyFoods #TamilFoodNews

 


Comments


View More

Leave a Comments