சமைத்த மீன் இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் நடவடிக்கை
சமைத்த மீன் இறைச்சியை குளிர் சாதனப்பெட்டியில் வைதிருந்து அதனை வாடிக்கையாளர்கள் கேட்ட வுடன் மீண்டும் சூடுபடுத்தி கொடுக்கக் கூடாது என்று உணவுப்பாதுகாப்புத்துறை உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அவ்வப்போது உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை, ஈரோடு பகுதியைத் தொடர்ந்து இப்போது பல்லடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
Must Read: பிரியாணியில் என்னென்ன சத்துகள் உள்ளன தெரியுமா?
திருப்பூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையில் உள்ள நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான டீம் பல்லடத்தில் உள்ள மீன் கடைகளில் 23ம் தேதியன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பல்லடம் பனப்பாளையம் பகுதியில் உள்ள 2 மீன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது அங்கே கெட்டுப்போன, அழுகிய நிலையில் இருந்த சுமார் 200 கிலோ மீன்களை சமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அதை கண்ட அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.
சோதனையின் போது செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, “எங்கள் சோதனையின் போது கடைகளில் அழுகிய, மீன்களை வைத்திருந்தது தெரியவந்தது. கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியுள்ளோம். . கடைகளில் மீன் இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும்.
சமைத்த மீன் இறைச்சியை, குளிர்சாதனப் பெட்டியில் இருப்பு வைப்பது மிக மிக தவறாகும், வாடிக்கையாளர் கேட்கும்போதுதான் உணவை தயாரிக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் சமைக்காத மீன்களை சேமித்து வைக்கும்போது தூளாக்கப்பட்ட ஐஸ் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொறித்த மீனை வாடிக்கையாளர்களுக்கு பழைய செய்தி தாள் பேப்பரில் சுற்றிக் கொடுக்ககூடாது என்றும், வாழை இலைகளில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு உண்ணுவதற்கு தரப்பட வேண்டும் உணவு விடுதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என தெரிவித்தார்.
#FssaiRaid #FoodOfficersRaid #RaidAtPaladam
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments