சக்கையான உணவுகளை விட சத்து நிறைந்த உணவு உண்பது நல்லது..
உணவுதான் நம் இயக்கத்தின், ஆற்றலின் முக்கிய சக்தியாக விளங்குகிறது. சைவம்,அசைவம் எது சிறந்தது என்பதை விடவும், அது சைவம் ஆனாலும், அசைவம் ஆனாலும் அளவோடு உண்டால் யாருக்கும் எந்த உடல்நலக்கோளாறும் ஏற்படாது.
உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரத சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது முக்கியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். புரத சத்துகள் பொதுவாக அசைவ உணவுகளில்தான் அதிகம் இருக்கின்றன. சிறுவர்கள், இளைஞர்கள் என ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் அசைவ உணவை எளிதில் செரிக்கும் திறன் கொண்டவர்கள். எனவே சிறியவர்களும், இளைஞர்களும் புரதம் நிறைந்த அசைவ உணவுகளை உண்ணலாம்.
Must Read: உடல் எடையை குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் பாதாம் பருப்பு அவசியம்….
மருத்துவர்களின் அறிவுரையின்படி முதியவர்கள் சைவ உணவுகளுக்கே முன்னுரிமை தருகின்றனர். அவரை மற்றும் பருப்பு வகைகளில் போதுமான அளவுக்கு புரதம் உள்ளது. புரத சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தும்போது சோயா, அவரையை சமைத்து சாப்பிடலாம். முளைகட்டிய தானியங்களும் புரத சத்துக் கொண்டவை என்பதால் அதையும் முதியோர் சாப்பிடலாம்.
பச்சைப்பறு, கடலை ஆகியவற்றை முதல்நாளே தண்ணீரில் ஊற வைத்து, முளைகட்டியதும் சாப்பிட வேண்டும். முளைகட்டிய தானியங்களை தினமும் எடுத்துக் கொண்டால் உடல் கட்டுக்கோப்புடன் இருக்கும். பட்டாணியில் புரத சத்து மட்டுமின்றி வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன. சோளத்தில் புரதசத்துடன் நார்சத்தும் இருக்கிறது.
தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது. உடலுக்குத் தேவையான அனைத்து வகையான சத்துகளும் கீரையில் இருக்கின்றன. நிலக்கடலை, காளான் ஆகியவற்றிலும் புரத சத்துகள் அதிக அளவு உள்ளன. இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
-பா.கனீஸ்வரி
#EnrichFoods #NutrientFoods #HealthyFoods
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments