பனை விவசாயத்திற்கு நல்ல எதிர்காலமும் அதிகரிக்கும் சந்தை வாய்ப்புகளும்...


அங்காடி முன் விலை உயர்ந்த மாருதி எர்த்தியோஸ் கார் வந்து நிற்கிறது.  காரில் இருந்து கருப்பட்டி கொட்டானை இறக்குகிறார் பனை விவசாயி அந்தோணி.  வெளிநாட்டு ஆர்டருக்காக அவசரமாக 100 கிலோ கருப்பட்டி கேட்டிருந்தேன் அவரிடம். காலையில் பனை ஏறி முடித்துவிட்டு மதியம் தன் காரிலேயே கொண்டுவந்து விட்டார்.

காலையில் பார்சல் ஆபீசில் இருந்து எனது கடைக்கு லோடு கொண்டுவந்த ஆட்டோகாரர் சுதாகர் படித்திருப்பது பொறியியல் பட்டப்படிப்பு. பல லட்சம் செலவு செய்து பொறியியல் பட்டம் பெற்று மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். 

Must Read: ஆன்லைன் உணவு விநியோகத்தில் 9ம் இடம் பிடித்த ஸ்விக்கி

பனை ஏற படித்த அந்தோணி மாதம் இரண்டு லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கிறார். தன் பகுதி மாணவர்களுக்கு மரம் ஏற பயிற்சியும் கொடுத்து அவர்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தி தருகிறார்.பொள்ளாச்சியில் நான் கருப்பட்டிக்காக ஒப்பந்தம் போட்டிருக்கும் முருகேசன் அண்ணாச்சியும் கார்,பங்களா என வசதியாக இருக்கிறார். அந்தோணி,முருகேசன் இருவருமே மிக நேர்மையாக தொழில் செய்து வருபவர்கள். அதில் வளர்ச்சியும் அடைந்திருக்கிறார்கள். வசதியும் பெற்றிருக்கிறார்கள். 

பனைத்தொழிலில் கிடைத்த வசதியும் வாய்ப்பும்

பனை விவசாயத்திற்கு நல்ல எதிர்காலமும் சந்தை வாய்ப்பும் இருக்கிறது. அவசரப்பட்டு பனைகளை வெட்டிவிடாதீர்கள். வாய்ப்புள்ள இளைஞர்கள் பனையேற கற்று கொள்ளுங்கள். பின்னர் பனங்காட்டை குத்தைகைக்கு எடுத்து தொழில் துவங்குங்கள். சுத்தமான பதநீர் லிட்டர் 100 ல் இருந்து 150 வரை விலை இருக்கிறது. சுத்தமான கருப்பட்டிக்கு கிலோ 300 முதல் 400 ரூபாய் விலை கிடைக்கிறது. சுத்தமான பனங்கற்கண்டுக்கு கிலோ 450 முதல் 550 வரை விலை கிடைக்கிறது. ஆறு மணி நேர உழைப்பில் தினம் குறைந்தபட்சம் 2000 ரூபாய் சம்பாதிக்கலாம்.  பனையேற கற்று கொள்வோம்... வாருங்கள் இளைஞர்களே.

படம், தகவல்; பசுமை சாகுல்

#PalmTree  #PalmSugar #PalmCultivation  #PalmTreeIncome

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments