ஜனவரி 1 ஆம் தேதி நம்மாழ்வார் 9ஆம் ஆண்டு நினைவேந்தல்


வானகத்தில் நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் நிகழ்வுகள் தொடர்ச்சியாக மக்கள் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் நம்மாழ்வார் ஐயாவின் நினைவுகளோடு இயற்கை வழி வேளாண்மை, விதைகள், மூலிகைகள், இயற்கை வாழ்வியல் செயல்பாடுகள், சூழலியல் செயல்பாடுகள் என பல செயல்பாடுகளும் முன்னெடுக்கப் படுகிறது.

இந்நிகழ்வில் ஐயாவின் நெஞ்சுக்கு நெருக்கமான முன்னோடி உழவர்கள், இளைஞர்கள், சூழலியல் ஆர்வலர்கள், மரபு கலைஞர்கள், நண்பர்கள், களப்பணியாளர்கள் என  பலரும் கலந்து கொண்டு மக்களுக்கான பணியை செய்துவருகிறோம்.  அதன்படி வருகிற ஜனவரி1, 2023ல் 9ம் ஆண்டு நம்மாழ்வார் நினைவேந்தல் வானகத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

Must Read:  உடல் எடையைக் குறைக்க உதவும் பொன்னாவாரை

இசை நிகழ்ச்சி., கலை நிகழ்ச்சி, பார்வையாளர்கள் பங்கேற்பு நாடகம் ஆகியவற்றுடன் சிறுதானிய உணவு (மதிய உணவு),வழங்கப்படும். 

வானகத்தில் நம்மாழ்வார் நினைவு தினம் அனுசரிப்பு

இதனைத் தொடர்ந்து விவசாயிகள் அனுபவ பகிர்வு, நண்பர்களுடன் கலந்துரையாடல்.,  விதை கண்காட்சி, மூலிகை கண்காட்சி, பண்ணை விளைபொருட்கள் கண்காட்சி, நம்மாழ்வாரின் புத்தகங்கள் விற்பனை,இயற்கை உணவுப் பொருட்கள் விற்பனை ஆகியவையும் நடைபெற்கின்றன. 

ஜனவரி 1 ஆம் தேதி காலை 9மணி முதல் மாலை 5மணி வரை வானகம், நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்,சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம்-621311.என்ற முகவரியில் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நிகழ்விடத்தின் கூகுள் மேப்; https://maps.app.goo.gl/4ftu1AT41YmQ9Do19  . மேலும் விவரங்களுக்கு +91 8668098492, 8668098495, 9445879292 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

இணையதளம் : https://vanagam.org   https://vanagam.page.link/app

#OrganicAgricultureTraining #AgricultureConferece #AgricultureExhibition #AgricultureEvents

 

 



 


Comments


View More

Leave a Comments