நள்ளிரவில் நெஞ்சுவலி; கவனத்தில் கொள்ள சில முதலுதவி குறிப்புகள்…


நல்லா தான் இருந்தார். திடீரென காலையில் பார்க்கும் போது படுக்கையிலேயே இறந்து கிடந்தார், என்று மாரடைப்பால் இறந்த நபர்களின் உறவினர் கூறுவதை நிறைய முறை கேட்டுள்ளேன். 

அதற்கு உதாரணமாக அமைந்து விட்டது நடிகர் மயில்சாமியின் மரணம்.அதிகாலை வரை கோவிலில், நூற்றிற்கும் மேற்பட்ட மக்களுடன்  , கையில் மைக்கை பிடித்து பாடிக்கொண்டிருந்த மனிதர், அடுத்த ஒரு மணி நேரத்தில் இறந்து போவார் என்று அங்கிருந்த ஒருவர் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். அதான் ஹார்ட் அட்டாக். 

Must Read: தினமும் மாதுளை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

24 மணி நேர கிளினிக் திறந்த பிறகு, நள்ளிரவிலும், விடியற்காலையிலும் நெஞ்சு வலியுடன் நிறைய பேர் வருகின்றனர்.அவர்களை 4  வகைகளாக பிரிக்கலாம். 

1. ECG எடுத்து பார்த்து, மாரடைப்பின் அறிகுறிகள் இருக்குமாயின், முதலுதுவி செய்துவிட்டு, மேற்சிகிச்சைக்காக இதய மருத்துவருக்கு refer செய்து, அங்கே சென்று அஞ்சியோ / பை பாஸ் செய்து, நலமுடன் வீடு திரும்பி, அடுத்த வாரம் எங்களை பார்த்து,  "நல்ல நேரத்துல சரியா அனுப்பி வைத்தீர்கள் " என்று நன்றி சொல்லும் நபர்கள்.

மாரடைப்பு என வர காரணம்

2.  மேற்கூறிய பிரச்சனையுடன் வந்து, மேற் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கும் முன்பே, கிளினிக்கிலேயே அல்லது ஆம்புலன்சில் செல்லும்  வழியிலேயே உயிரிழந்த நபர்கள் .

3. இதய மருத்துவரை போய் பார்த்தோம், ECHO பார்த்துவிட்டு," ஒண்ணுமில்ல. வெறும் தசை வலி தான் " என்று சொல்லிவிட்டார். நீங்க தான் ரொம்ப பயமூத்திட்டீங்க எனும் நபர்கள்.

4.  ECG நார்மலாக இருக்கும். ஆனால் நெஞ்சு எரிச்சல் குறையவில்லை . ஆசிடிட்டி ஆக இருக்கும் என்று நினைத்து அதற்கான மருந்துகளை மட்டும் எழுதி கொடுக்க, அந்த நபர் அடுத்த 10-15 நாட்களில் மாரடைப்பால் இறந்த செய்தியை அவரது உறவினர் வந்து கூறி, ECG நார்மலாக இருந்தும் எப்படி அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது என்று கேள்வி கேட்பார்கள்.

சிலருக்கு ECG நார்மலாக இருக்கும், ECHO வும் நார்மலாக இருக்கும். ஆனால், நெஞ்சு வலி மட்டும் குறையாது. அவர்கள் CK - MB, மற்றும் Troponin I /T,  Hs CRP ஆகிய இரத்த பரிசோதனைகளை செய்து பார்த்து மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்று அறிந்து கொள்ளலாம்.

TREAD MILL STRESS TEST செய்வதன் மூலம், ISCHEMIA ON EXERTION ( அதாவது ட்ரெட் மில்லில் நடக்க வைத்து, படிப்படியாக அதன் வேகத்தை அதிகரித்து, ட்ரெட் மில்லின் வேகம் அதிகரிக்க, அதற்க்கேற்ப  இதயத்துடிப்பு எவ்வளவு அதிகமாக உயர்கிறது ? அவ்வாறு இதய துடிப்பு அதிகறிக்கையில் ,ST ELEVATION ( மரடைப்பின் முக்கிய அறிகுறி)  ஏற்படுகிறதா என்று கண்காணிக்கப்படும்.)

அவ்வாறு ST ELEVATION ON EXERTION இருக்குமாயின், மேற்கொண்டு  ஆஞ்சியோகிராம் செய்து, இதயத்தின் இரத்த குழாய்களில் எங்கே அடைப்பு உள்ளது என்று கண்டறியப்படும்.அடைப்பின் தன்மைக்கு ஏற்ப, angioplasty செய்யப்படும்.

இதயநோய் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

 

நிறைய பேர் ஆஞ்சயோகிராமையும், அஞ்சியோபிளாஸ்டியையும் ஒன்று தான் என்று தவறாக எண்ணி, "எனக்கு ஏற்கனவே அஞ்சியோ செஞ்சிருக்கு என்பார்கள். ரிப்போர்ட்டை வாங்கி பார்த்தால் அஞ்சியோக்ராம் செய்திருப்பார்கள். 

Must Read: புரதத்தால் கிட்னிக்கு ஆபத்து, கொழுப்பால் இதயத்துக்கு ஆபத்து என்பது சரியா?

ஆஞ்சியோக்ராம் என்பது ecg,  echo ,  Ct scan போல ஒரு பரிசோதனை மட்டுமே. அஞ்சயோபிளாஸ்டி என்பது இதயத்தில் இரத்த குழாய் அடைப்பை சரி செய்யும் சிகிச்சை முறை.

திடீரென நெஞ்சு வலி மற்றும் ( முக்கியமாக நெஞ்சின் இடது பகுதி மற்றும் நடுப்பகுதி) , இடது பக்க தோள்பட்டை வலி வந்தால், பதறாமல், ( aspirin 75mg + clopidogrel 75mg + atorvastatin 20mg ) ecospirin gold 20 மாத்திரை இரண்டை முழுங்கிவிட்டு உடனே மருத்துவமனைக்கு செல்வது நல்லது. . 

இந்த பதிவு,  மருந்து கம்பெனிக்கான விளம்பரமில்லை. இதே மருந்து வேறு எந்த பிராண்ட் கிடைத்தாலும் பரவாயில்லை. வாங்கி சட்டைப்பையிலேயே வைத்துக் கொல்லலாம்.

-Dr.Prakash Murthy MBBS MD

#chestpain #heartattack #firstaid  #preventheartattack #heartattackhealthalert

TRENDING;  மூட்டுவலிக்கு முடவாட்டுக்கால்கிழங்குஜொமாட்டோ அடாவடி,  தேன்சாப்பிடும் முறை


Comments


View More

Leave a Comments