சிறுநீரக கற்களைக் கரைக்கும் குடசப்பாலை
நமது அருகாமையில் வளரும் மூலிகைகளைக் கொண்டு நமது உடல் நலனை பேணி பாதுகாக்க முடியும். அந்த வகையில் மூலிகைகளின் நன்மைகள் குறித்தும் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ஆதனூரை சேர்ந்த திரு.ASNசாமி அவர்கள் தொடர்ந்து நமக்கு வழங்கி வருகிறார். இன்று குடசப்பாலை மற்றும் குப்பை மேனி ஆகியவற்றில் உள்ள நன்மைகள் குறித்து அவர் கூறும் தகவல்களைப் பார்க்கலாம்.
குடசப்பாலை
எதிரடுக்கில் அமைந்த நீள்வட்ட இலைகளையும் மணமுள்ள கொத்தான வெள்ளை மலர்களையும் உருளை வடிவ இரட்டை காய்களையும் உடைய விதைகளையும் உடைய சிறிய இலை உதிர் மரம் தானே வளர்கிறது.
Must Read: கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம் இஞ்சி மிட்டாய்…
பட்டை விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை பட்டை உடல் சூட்டை மிகுத்தல் செரிமானம் மிகுத்தல் கோழையகற்றுதல் சீதபேதியை கட்டுப்படுத்துதல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது விதை வயிற்று வாய்வு அகற்றல் திசுக்களை சுருங்கச் செய்தல் சிறுநீரக கற்கள் கரைத்தல் காய்ச்சல் தணித்தல் குடற்புழு அகற்றுதல் ஆகிய மருத்துவ பண்புகளை உடையது.
50 கிராம் பட்டையை பஞ்சு போல் நசுக்கி ஒரு லிட்டர் நீரிலிட்டு 250 மில்லி ஆகும் வரை கொதிக்கவைத்து 50 மில்லியாக நாள்தோறும் மூன்று வேளை பருகிவர காய்ச்சல் உடல் பலவீனம் வயிற்றுப்போக்கு சீதபேதி ஆகியவை குணமாகும் இரண்டு கிராம் பட்டை பொடி அல்லது 5 மில்லி பட்டை சாறுடன் சம அளவு இஞ்சிச் சாறு கலந்து காலை மாலை சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு சீதபேதி ஆகியவை தீரும்.
குடற் புழுக்கள் வெளியேறும் சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று உபயோகப்படுத்தவும் பாலை விதையை முத்தக்காசு வகைக்கு 50 கிராம் பொடித்து 250 மில்லி நீரிலிட்டு நாலில் ஒன்றாகக் காய்ச்சி வடித்தல் 20 மில்லியுடன் 10 மில்லி தேன் 5 மில்லி இஞ்சிச்சாறு கலந்து 2 வேளையாக பருகி வர இரத்த மூலம் குணமாகும்.
Must Read: வாய் நாற்றம் தீர கிராம்பு உடல் எரிச்சல் தீர கீழா நெல்லி
குடற்புழுக்கள் அகலும் 10 கிராம் விதையை அரைத்து அரை லிட்டர் நீரில் கலந்து 125 மிலி ஆகும்வரை காய்ச்சி 30 மில்லியாகச் காலை மாலை சாப்பிட்டு வர வயிற்றுவலி இரைப்பிருமல் மது மேகம் ரத்த மூலம் வயிற்றுப்போக்கு சீதபேதி ஆகியவை குணமாகும் பட்டையை நீரில் இட்டு கொதிக்கவைத்து வாய் கொப்பளிக்க பல் வலி தீரும் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி செய்யவும்
குப்பை மேனி
மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும் இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி இதை பூனைவணங்கி என்றும் அழைப்பார்கள் தானாக வளர்கிறது முழு மருத்துவப் பயனுடையவை.
இதன் இலை வாந்தி உண்டாக்கி கோழை அகற்றியாகவும் மலமிளக்கியாகவும் செயல்படும் ஒரு சிட்டிகை சமூல சூரணம் நெய்யில் காலை மாலை ஒரு மண்டலம் கொடுக்க 8 வித பவுத்திர நோயும்தீரும் பிற மருத்துவ முறையினால் சிக்கலான உத்திரத்திற்கு ஒரு வாரம் காலை மாலை 50 மில்லி அவுரி குடிநீர் கொடுத்த பின்னர் மேற்கண்ட சிகிச்சையை 70 முதல் 90 நாட்கள் செய்ய பவித்திர நோய்கள் அனைத்தும் தீரும்
Must Read: தேன் நெல்லி சாப்பிடலாமா மருத்துவர் விக்ரம் குமார் சொல்லும் விளக்கம்…
ஒரு லிட்டர் நீரில் ஒரு பிடி போட்டு 8 இல்ஒன்றாய் காச்சிக் கொடுக்க நாடா புழு நாக்குப்பூச்சிநீங்கும் பேதியாகும் சிறுவர்களுக்குப் பாதியளவு கொடுக்கவும் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் தீரும் இலைச் சூரணத்தைப் பொடி போல் நசியமிட தலை வலி நீங்கும் இலை சிறிது மஞ்சள் உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சற்று நேரம் கழித்து குளிக்க தோல் நோய்கள் அனைத்தும் தீரும்
நன்றி: ASNசாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை ஆதனூர் திருவண்ணாமலை மாவட்டம் 9442311505
#kudasapalaiHerbal #KuppameniHerbal #BenefitsOfHerbal #PattiVaithiyam
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Comments