விநாயகர் சதுர்த்தியின்போது பிரசாதமாக படைக்கப்படும் உணவுகள்...


ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்யேக உணவுகள் 

தமிழ்நாட்டில் கொழுக்கட்டை 

கர்நாடகாவில் கத்தரிக்காய் கறி 

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி என்றும்  கர்நாடகாவில் விநாயகர் ஹப்பா என்றும் தென்னிந்தியாவில் வெவ்வேறு பெயர்களில் ஒரே பண்டிகையை கொண்டாடுகின்றனர். தெருக்களில், வீடுகளில் விநாயகர் சிலைகள் நிறுவுதல் முதல் அதனை கடலில் அல்லது நீர்நிலைகளில் கரைத்தல் வரை பலவிதமான கொண்டாட்டங்கள், நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். 

Also Read: இயற்கை வேளாண் மற்றும் மரபு கலை நிகழ்வுகள்

விநாயகர் சதூர்த்திக்கு உரிய பிரத்யேகமான ஆடம்பர விருந்துகள் இல்லாமல் இந்த கொண்டாட்டங்கள் முழுமையடையாது. ஒவ்வொரு பிராந்தியத்திற்கு என்றும் தனிதனியே கொண்டாட்ட சிறப்புகள் உள்ளன, மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் சில சுவையான உணவுகள் விநாயகருக்கு படைக்கப்பட்டு மக்களால் உண்ணப்படுகிறது.

மோகதம் அல்லது கொழுக்கட்டை

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில்  செய்யப்படும் நீராவியாவில் வேக வைத்து சுவாமிக்குப் படைக்கப்படும் பிரசாதமாகும்.. இந்த சிற்றுண்டியில் இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளன. விநாயகர் சதுர்த்தியின்போது மிகவும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்று மோதகம். 

கொழுக்கட்டை ஆவியில் வேக வைக்கப்பட்டு உண்ணப்படுகிறது

இந்த மோதகத்தின் உள்ளே.எள், வெல்லம் உள்ளிட்ட பாரம்பரியப் பொருட்களைத் தவிர,இப்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப  சாக்லேட் போன்றவற்றையும் வைக்கப்பட்டு வேக வைக்கப்படுகிறது. 

வெள்ளை ஒபட்டு மற்றும் யென்னேகை போன்ற உணவுகள் வட கர்நாடகவில் பாரம்பரிய உணவுகளாக விநாயகர் சதுர்த்தியின்போது சுவாமிக்குப் படைக்கப்படும்.  வெள்ளை ஒப்பாட்டு என்பது ஒரு இந்திய ரொட்டி ஆகும், ஒப்பாட்டு மாவை உள்ளடக்கியதாகும். யென்னேகை என்பது சுவையான கத்தரிக்காய் கறியாகும்.  

Also Read: சப்பாத்தி உடல் எடையை குறைக்க உதவுமா?

கர்ஜிகை அல்லது கடபஸ்

இதில் இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளன. இது கொழுக்கட்டை போன்ற ஒன்றாகும். இனிப்பில் உலர்ந்த தேங்காய், சர்க்கரை மற்றும் எள் ஆகியவை கொண்டிருக்கும்.  கார வகையில் பருப்பு வகைகள், மிளகாய் மற்றும் கொத்தமல்லி ஆகியவை உள்ளன.

சிறப்பு லட்டுக்கள் 

சில வீடுகளில் ராகி, ரவா அல்லது கோதுமையை அடிப்படையாகக் கொண்டு எள், உலர் பழங்கள் மற்றும் வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும். 

போளி 

பரவலாக இந்திய மாநிலங்களில் போளியும் விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகருக்குப் படைக்கப்படுகிறது. போளியின் உள்ளே உலர்ந்த அல்லது ஈரமான உணவுப்பொருட்கள் வைத்து சமைக்கப்படுகிறது.

இனிப்பு போளியில் வெல்லம், தேங்காய் சேர்க்கப்படுகிறது

உலர்ந்த வகைகளில் மசாலாப் பொருட்களுடன் தேங்காய் மற்றும் வெல்லம் உள்ளது. ஈரமான வகைகளில் பருப்பு வகைகள் மற்றும் வெல்லம், மசாலாப் பொருட்கள் உள்ளன. போளியை சுடசுட சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். போளி தயாரிப்பில் நெய் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது. 

பாயாசம் அல்லது கீர்

இந்த இனிப்பு சேமியா, பருப்பு வகைகள் அல்லது பாப்பி விதைகளுடன் பால் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. முந்திரி திராட்சை போன்ற உலர் பழங்கள்.சேர்த்து இனிப்பான வகையில் இது தயாரிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு மட்டுமின்றி அனைத்து வகை கொண்டாட்டங்களிலும் பாயாசம் முக்கிய பங்கு வகிக்கிறது. 

-ஆகேறன் 

#Kozhukkatta #Mothagam #SweetKozhukkatta #KaraKozhukkatta #VinayagarChaturthi 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai

 


Comments


View More

Leave a Comments