அதிக கொழுப்புள்ள உணவுகளால் உடல்நலத்துக்கு ஆபத்து…


 

கெட்டகொழுப்பு உணவுகளால் ஆபத்து 

நல்ல கொழுப்பு உணவுகள் எவை ?

உடல் பருமனை எவ்வாறு குறைப்பது?

மீன் உணவுகளை சாப்பிடுவது முக்கியம்

ஆரோக்கியமற்ற, அதிக கொழுப்பு கொண்ட உணவு எபோதுமே உடல் நலத்துக்கு ஏற்றதல்ல. உடலில் இயக்க சுழற்சிக்கு ஆபத்தாகும்.  சமீபத்திய ஆய்வில், அதிக கொழுப்புள்ள உணவு உட்கொள்வதற்கும், உடல் வாழ்வியல் சுழற்சிக்கும் இடையேயான தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது, அதிக கொழுப்பு உள்ள உணவை சாப்பிடுவதால் உடல் பருமன், நீண்ட காலத்திற்கு கடுமையான கோளாறுகளை ஏற்படக்கூடும். 

எலிகளில் பரிசோதனை  

ஆய்வகம் ஒன்றில் எலிகளுக்கு அதிக கொழுப்புள்ள உணவை கொடுத்து பரிசோதிக்கப்பட்டது. அதன்படி அதிக கொழுப்புள்ள உணவுகள் எலியின் மூளையில் உள்ள செயல்பாட்டை தொந்தரவு செய்கிறது என தெரியவந்துள்ளது. இது அதிக உணவு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது என்றும் தெரிய வந்தது. 

Also Read: சப்பாத்தி உடல் எடையை குறைக்க உதவுமா?

உடல் பருமன் மூன்று மடங்கானது 

இந்த ஆய்வுகளின் முடிவானது, 'தி ஜர்னல் ஆஃப் பிசியாலஜி'யில் என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டன. 1975 முதல் உலகளவில் உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 

1975 முதல் உலகளவில் உடல் பருமன் பிரச்னை அதிகரித்துள்ளது

இங்கிலாந்தில் மட்டும்,பெரியவர்களில்  28 சதவிகிதம் பேர் உடல் பருமனாகவும், மேலும் 36 சதவீதம் பேர் அதிக எடையிலும் உள்ளனர். உடல் பருமன் வகை 2 நீரிழிவு, இதய நோய், பக்கவாதம் மற்றும் சில வகையான புற்றுநோய் போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்று தெரிகிறது.  இந்த புதிய ஆராய்ச்சி எதிர்கால மருத்துவ ஆய்வுகளுக்கு ஒரு மூலாதாரமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

Also Read: கோதுமை, மைதா உணவுகள் நல்லதல்ல

வரலாற்று ரீதியாக, மூளையின் ஒரு பகுதியில் உள்ள சுழற்சி அல்லது முதன்மை உடல் கடிகாரம் என்பது ஹைபோதாலமஸ் என்று அழைக்கப்படுகிறது. நமது உடலின் தினசரி செயல்கள்(ஹார்மோன் அளவுகள், பசியின்மை போன்றவை) சில கட்டுப்பாடு மூளை மற்றும் உடலின் பல பகுதிகளிலும் உள்ளது,

கெட்டகொழுப்பால் ஏற்படும் விளைவுகள் 

உடல் பருமனின் போது, உணவு உட்கொள்வதில் தினசரி செயல்முறைகள் மற்றும் சாப்பிடுவது தொடர்பான ஹார்மோன்களின் வெளியீடு மழுங்கடிக்கப்படுகிறது அல்லது அகற்றப்படுகிறது என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது. இருப்பினும், பசியைக் கட்டுப்படுத்தும் மூளை மையங்களின் செயலிழப்பு ஒரு காரணமா அல்லது உடல் பருமனின் விளைவா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

உடல் பருமனால் ஹார்மோன்களின் வெளியீடு மழுங்கடிக்கப்படுகிறது

கிராகோவில் உள்ள ஜாகெல்லோனியன் பல்கலைக்கழகத்தில் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த புதிய ஆராய்ச்சி, அதிக கொழுப்புள்ள உணவு உண்ணும் எலிகள் எடை அதிகரிக்கத் தொடங்குவதற்கு முன்னும், பின்னும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். உணவு உண்ணும் நேரக் கட்டுப்பாட்டில் ஏற்படும் இடையூறு அதிக உடல் எடையின் விளைவாக இருப்பதை விட, உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் முன்மொழிகின்றனர்.

ஆராய்ச்சி நடைபெற்ற விதம் 

எலிகளின் இரண்டு குழுக்களில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது: நன்கு சீரான கட்டுப்பாட்டு உணவு (கொழுப்பிலிருந்து 10 சதவிகிதம் கிலோகலோரி) மற்றும் அதிக கொழுப்புள்ள உணவு (கொழுப்பிலிருந்து 70 சதவிகிதம் கிலோகலோரி) கொடுத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 

Also Read: துரித உணவுகளில் உள்ள எம்.எஸ்.ஜி எனப்படும் ஆபத்தை தெரிந்து கொள்ளுங்கள்

ஆரோக்கியமற்ற உணவின் தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் புதிய உணவை இளம் பருவ எலிகளுக்கு (4 வார வயது) அறிமுகப்படுத்தினர் மற்றும் தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு 24 மணிநேரம் உணவு உட்கொள்வதை கண்காணித்தனர். நரம்பியல் செயல்பாடு 24 மணிநேரத்தில் எவ்வாறு மாறுகிறது என்பதை அளவிடுவதற்கு மின் இயற்பியல் பதிவுகள் நிகழ்த்தப்பட்டன. 

இந்த ஆய்வு உடலின் இயக்கத்தின் இயல்பான செயல்பாட்டை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதற்கான புதிய ஆராய்ச்சி வாய்ப்புகளைத் திறக்கிறது என்று  ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

எப்படி அதிக கொழுப்பு உணவுகளை குறைப்பது? 

உணவில் சில மாற்றங்கள் செய்து கொலஸ்ட்ராலைக் குறைத்து உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்: நிறைவுற்ற கொழுப்புகளைக் குறைக்கவும். முதன்மையாக சிவப்பு இறைச்சி மற்றும் முழு கொழுப்புள்ள பால் பொருட்களில்தான் அதிக கொழுப்பு உள்ளது. எனவே கூடுமான வரைக்கும் இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும். 

 உணவில் மாற்றங்கள் செய்து கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம்

பேக்கரி, கேக் போன்ற உணவுகள் டிரான்ஸ் கொழுப்பு வகைகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உங்கள் ரத்த த்தில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன. .இந்த உணவுகளை எப்போதாவது எடுத்துக் கொள்வது தவறில்லை. ஆனால், தினந்தோறும் பேக்கரி உணவுகளை சாப்பிடுவது ஆபத்தானது. 

மீன் உணவுகள் முக்கியம் 

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த கடல் உணவுகள் அல்லது மீன் உணவுகளை அதிகம் உட்கொள்ளலாம். இறைச்சி உணவுகளை உண்ண விரும்புவர்கள் மீன் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். புரத சத்து கொண்ட உணவுகளையும் உங்கள் உணவு கட்டுப்பாட்டில் சேர்க்க வேண்டும். 

நல்ல கொழுப்பு உணவுகள் எவை 

பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள். முழு தானியங்கள். பாரம்பர்ய இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சிறுதானியங்கள், நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகள், பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே கூறியபடி மீன் உணவுகள் மற்றும் ஆளி, சியா விதைகள், பாதாம்பருப்பு, முந்திரிபருப்பு போன்ற கொட்டை வகைகளையும் உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

Also Read: வாதுமை கொட்டை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?


ஆலோசனை அவசியம்

உடல் பருமனாக இருக்கிறது அல்லது உடல் நலத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்,தாங்களாக ஏதேனும் செய்து உடல்நலத்தை கெடுத்துக் கொள்வது நல்லதல்ல.  உடல் நலம் என்பது உணவு, நமது அன்றாட செயல்பாடுகளில் மனதின் எதிர்வினைகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும். எனவே உரிய இயற்கை மருத்துவர் அல்லது ஆங்கில மருத்துவர் ஆலோசனை பெற்று உங்களுக்கு ஏற்ற உணவுகள்,உடற்பயிற்சிகள், யோகா பயிற்சிகளை மேற்கொண்டு, அவர்கள் தரும் உணவுபரிந்துரைகளையும் மேற்கொண்டால் உடல் பருமன் ஆபத்தில் இருந்து விடுபடலாம். 

நல்ல கொழுப்பு சத்து உணவுகள் எங்கு கிடைக்கும்?

நம் தெருவுக்கு அன்றாடம் வரும் சிறுவணிகர்களிடம் இருந்து மீன் உணவுகள் வாங்கலாம். சிறுதானியங்கள் போன்றவற்றை சமூக வலைதளங்களில் இயங்கும் இயற்கை உணவு குழுக்களிடம் இருந்து உண்மை தன்மையை அறிந்து வாங்கலாம். இப்போது எல்லாவற்றையும் ஆன்லைனில் வாங்கும் பழக்கம் கொண்டவர்கள் ஆன்லைன் ஸ்டோர்களிலும் வாங்கலாம். 

-ஆகேறன் 

#AvoidFatFood  #HealthyFoods #EatLowFatFoods #EatSeaFoods #BestFoodForWeghtLoss #WeghitLossFoods #Obesity

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai

 


Comments


View More

Leave a Comments