கொரோனா பக்கவிளைவுகள்; மூலிகை மருத்துவத்தால் குணம் பெற்றவர்..


மண்ணின் மருத்துவத்தை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். ஏற்கெனவே மாசிக்காய் சாப்பிட்டு பலன் பெற்றவர் பற்றி நான் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? இதோ... அவரே எழுதிய ஒரு பதிவை இங்கே பகிர்கிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா இரண்டாவது அலையில் நான்(ஜெனில் கார்த்திக்) கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதற்கான ஃஹோம் குவாரன்டைன் இருந்து மருத்துவ உதவியுடன் நலம் பெற்று வந்தேன். 

Must Read:பரவி வரும் பன்றி காய்ச்சல்; அறிகுறிகளை தெரிந்து கொண்டு சிகிச்சை பெறுங்கள்….

அதன் பிறகு 90 நாட்கள் கழித்து நான் கொரோனாவுக்கான  தடுப்பூசியை முதல் மற்றும் இரண்டாவது தவணை செலுத்திக் கொண்டேன். அதன் பிறகு எனக்கு உடல் நிலையில் சில அசவுகரியமான உடல் பாதைகள் ஏற்பட்டன.  குறிப்பாக 8 கிலோ எடையிழப்பு, பதற்றம், மனச்சோர்வு, மன அழுத்தம், ஜீரண மண்டலம் சரிவர ஜீரணிக்காமல் மிகுந்த வாய்வு வெளியேற்றம் போன்ற உடலில் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வந்தேன். 

அதன்பிறகு அதற்கான ஆங்கில வழி மருந்தினை உட்கொண்டு வந்தேன். ஆனால் அதில் நிரந்தர தீர்வு ஏற்படாத நிலையில் மேல்சிகிச்சையாக குடல் உள்நோக்கு பரிசோதனை மேற்கொண்டேன். அதில் குடல் மீகோசால் நன்றாக உள்ளது என்றும் Internalhemaroid உள்ளது என்றும் முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. 

ஆரோக்கியம் தரும் மாசிக்காய்

 

அதன்பிறகு மனப்பதற்றத்திற்கான மற்றும் மன அழுத்தத்திற்கான சிகிச்சைகளை 45 நாட்கள் மேற்கொண்டேன். அதிலும் முன்னேற்றம் இல்லாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகினேன். அதன் பிறகு எதேச்சையாக எனது முகநூல் நண்பர் திரு.மரிய பெல்சின் அவர்களின் அறிவுரை கிடைத்தது. 

தினமும் மூன்று வேளை மிளகு அளவு மாசிக்காயை வாயில் வைத்து உமிழ்நீருடன் நன்றாக கலந்து விழுங்குமாறு கூறினார். அதுபோல தற்போது மாசிக்காயை உடைத்து சிறிது அளவு வாயில் வைத்து நன்றாக ஊற வைத்து உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினேன்.  

கொரோனா பக்கவிளைவுகளுக்கு தீர்வு  

தற்சமயம் மேற்கூறிய உடல் உபாதைகளுக்கு நல்ல தீர்வாக அமைந்து வருகிறது. மேலும் எனது உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தினை கண்டு வருகிறேன் இத்தகைய மருத்துவ குணம் கொண்ட மாசிக்காயின் பயன்பாட்டை எடுத்துக் கூறிய என்னுடைய முகநூல் நண்பருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மாசிக்காய் படத்தையும் அவரது மெடிக்கல் ரிப்போர்ட்டையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

- எம்.மரிய பெல்சின் (9551486617)

#CoronaSideEffects,  #CoronaAfterTreatment , #CureFromCoronaEffects

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும் 

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 


 


Comments


View More

Leave a Comments