வாழைப்பழம் முதல் ஆப்பிள் வரை ஜீரண கோளாறை சரி செய்யும் உணவுகள்
நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள், தினந்தோறும் ஜீரணம் ஆகி கழிவாக வெளியேறுகிறது. ஜீரண சக்தி நன்றாக இருந்தால்தான் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தமாகும். ஜீரண சக்திதான நமது உடலின் அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் ஆதாரமாகும். ஜீரண சக்தியை நன்றாக வைத்திருக்கும் உணவுகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
வாழைப்பழம்
ஜீரண சக்தி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது வாழைப்பழம்தான். வாழைப்பழம் ஜீரண சக்தியை குறைபாடு இல்லாமல் வைத்துக்கொள்வதற்கு நாம் எப்போதும் முதலிடம் தர வேண்டிய இயற்கை தந்த கொடையாகும். வாழைப்பழத்தில் உள்ள நார் சத்து குடல் இயக்கத்துக்கு மிகவும் பலன் அளிக்கிறது. குறிப்பாக செவ்வாழைப் பழம் சாப்பிட்டால், ஜீரணசக்தி சீரடையும். உடல் எடையையும் சரியான அளவு நிர்வகிக்க முடியும்.
எலுமிச்சை
தினமும் காலையில் இளம் சூட்டில் தண்ணீரில் எலுமிச்சை சேர்த்து, அதில் கொஞ்சம் தேனும் சேர்த்து அருந்தினால், ஜீரணசக்தி சீரடையும். அதிகாலையில் இதனை குடிப்பதன் மூலம் மெட்டபாலிஸம் அதிகரிக்கும்.
Must Read: வலுவான தலைமுடிக்கு விளம்பரங்களை நம்பாதீர், சத்துள்ள உணவுகளை மட்டும் நம்புங்கள்
தேன், எலுமிச்சை சாறுகாரணமாக தேவையற்ற கொழுப்புகள் நீங்கி உடல் எடை குறையவும் வழி வகுக்கும்.தினந்தோறும் எளிய முறையில் எல்லோரும் கடைபிடிக்கக் கூடிய முறையாகும். இதை தவறாமல் கடைபிடித்தால் ஜீரண சக்தியை குணப்படுத்த மருத்துவமனை படிகளை ஏற வேண்டிய தேவை இருக்காது.
பப்பாளி
மிகவும் சத்துள்ள எளிய உணவு வகையான பப்பாளி ஜீரண சக்தி கொண்ட இயற்கை உணவாகும். குறிப்பாக பப்பாளியில் பப்பைன் எனப்படும் என்சைம் இருக்கிறது.
இது ஜீரண சக்தியை தூண்டி, ஜீரண உறுப்புகள் நன்றாக செயல்பட உதவுகிறது. இதன் மூலம் நமது உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.
வெள்ளரி
நமது உடலில் அமிலத்தன்மையை சரியான அளவு நிலை நிறுத்தும் சக்தி வெள்ளரிக்கு உண்டு.. இரைப்பை அழற்சி காரணமாக ஜீரணக்குழாயில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வெள்ளரி உண்பதால் அந்த புண்கள் எளிதில் குணமாகும். நம் உடலில் நீர் சத்து நிலைத்திருக்கவும் வெள்ளரி உதவுகிறது. நமது ஜீரணத்துக்கு நீர் சத்து மிகவும் முக்கியமாகும்.
ஆப்பிள்
ஆப்பிள் பழத்தில் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம் மற்றும் எண்ணற்ற தாதுக்கள் உள்ளன. ஆப்பிளில் உள்ள நார்சத்து ஜீரண சக்திக்கு மிகவும் ஏற்றதாகும்.தினம் ஒரு ஆப்பிள் உண்ணும்போது ஜீரண கோளாறுகளில் இருந்து விடுபட முடியும்.
-ரமணி
#DigestionFoods, #DigestionDietFoods, #FoodsForHealthyDigestion
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments