
ஸ்விக்கி உணவு விநியோக செயலி ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது
ஆன்லைன் உணவு விநியோக செயலிகளில் ஒன்றான ஸ்விக்கி செயலியில் பணியாற்றும் ஊழியர்கள் சென்னை உள்ளிட்ட நகரங்களில் கடந்த 20 ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 15 மணி நேரத்துக்கும் அதிகமான வேலை, குறைவான சம்பளம், ஊக்கத்தொகை நிறுத்தம் போன்றவற்றுக்கு எதிராக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் தாங்கள் கொண்டு வந்த மாற்றம் ஊழியர்களுக்கானது என்று ஸ்விக்கி நிறுவனம் தொடர்ந்து கூறி வந்தது. எனினும் ஊழியர்கள் ஐந்து நாட்களுக்கும் மேலாக தங்களது போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர்.
ஸ்விக்கி ஊழியர்களின் போராட்டத்தால் சென்னையில் பெரும்பாலான ரெஸ்டாரெண்ட்கள், உணவு விடுதிகளின் ஆன்லைன் வழியிலான விநியோகம் முழுமையாக தடைபட்டது. ஸ்விக்கி நிறுவனத்தில் மட்டும் பதிவு செய்திருந்த சில உணவகங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன.
Must Read: நவராத்திரி விரதத்துக்கு ஏற்ற 5 சிறுதானிய உணவுகள்…
இந்த நிலையில் ஸ்விக்கி நிறுவனத்தின் தரப்பில் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின் முடிவில் உடன் பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து திங்கள் கிழமை காலை முதல் ஸ்விக்கி ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்குத் திரும்பியுள்ளனர்.
ஊதியத்தில் மீண்டும் பழையை நடைமுறையை தொடருவது என ஸ்விக்கி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வேலை நேரத்திலும் பழைய நடைமுறை தொடரும் என்று நிறுவனம் தரப்பில் சம்மதம் தெரிவித்திருப்பதாக ஸ்விக்கி ஊழியர்கள் கூறினர்.
-ரமணி
#SwggyStrikeEnds #SwggyWorkersStrikeEnds #SwiggyOperationsNormalize
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments