
கர்பப்பையை பாதுகாக்கும் கழற்ச்சிக்காய்…
சமீப காலமாக கழற்ச்சிக்காய் பற்றிய செய்திகளை கேட்டிருப்போம்.அறிந்திருப்போம். அதைப்பற்றிய விளக்கமே அளிக்கவே இந்த பதிவு வெளியிடப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Caesalpinia bonduc (L), Roxb என்பதாகும். இதனை ஆங்கிலத்தில் Grey_Nicker என்று அழைப்பர்.கழற்ச்சிக்காயின் விதைகளை ஆங்கிலத்தில் Nicker_Beans என்பர். கழற்ச்சிக்காய் கொடி வகை தாவரமாகும். கழற்சிக்காயை கர்பப்பை_காவலன் எனவும் கூறுவர்.
பயன்கள்:
பெண்களின் கர்ப்பபையில் ஏற்படக் கூடிய கட்டிகள் மற்றும் நீர்கட்டிகள் பிரச்சினைகளுக்கு நிவாரணமளிக்க உதவும், கை கால் குத்தல் குடைச்சலைக் குறைக்கும். உடல் சூடு தனியும்.
ஆண்களுக்கு இருக்கக்கூடிய விரை வீக்கம் மற்றும் நீர்கட்டியை கரைக்க உதவும், கேஸ்ட்டிரிக் அல்சரைக் கட்டுப்படுத்த உதவும். உடலில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கபத்தாலான சிறு வீக்கத்தை கட்டிகளை குறைக்க உதவும். ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்ய உதவும்.
சுவை எப்படி இருக்கும்?
கழற்ச்சிக்காயின் சுவை கசப்பாக இருக்கும். கழற்ச்சிக்காய் விதையின் ஓடு சற்று கடினமாக இருக்கும். ஆகையால் உள்ளிருக்கும் பருப்பை எடுக்க அம்மி அல்லது சிறிய ஆட்டுக்கல் போன்றவற்றைக்கொண்டு இடித்தெடுக்கலாம். ஒரு கழற்ச்சிக்காய்க்குள் ஒரு பருப்பு இருக்கும்.
உட்கொள்ளும்_முறை:
கலர்ச்சிக்காய் பருப்பு 1எண்ணம் மற்றும் மிளகு 5எண்ணம் சேர்த்து பொடியாக்கி தேன் அல்லது வெந்நீரில் கலந்து காலை மற்றும் மாலை உணவுக்கு பின் உட்கொள்ளலாம். சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்களை தவிர மற்ற எல்லோரும் இதை உட்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
Must Read: மாற்றுத்திறனாளி உணவு விநியோக முகவர்…
இதுபோன்ற பல மருத்துவ குணங்களைக் கொண்ட கழற்ச்சிக்காயினை பெற 8940882992 என்ற மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். கழற்சிக்காய் 500 கிராம் விலை ரூ. 350.
தகவல் மற்றும் புகைப்படங்கள் நன்றி; Karthick Mat முகநூல் பதிவு
#Kalarchikai #KalarchikaiUse #KalarchikaiBenefits #Pattivaithiyam
Comments