வெளியானது கபசுரகுடிநீரின் இரண்டு ஆய்வுகள்…


கபசுரகுடிநீர் குறித்து இரண்டு ஆய்வுகள் 

பிஎம்சி சர்வதேச மருத்துவ இதழில் வெளியானது

வைரசின் பெருக்கத்தை கட்டுப்பாடு செய்வது குறித்து ஆய்வு

கோவிட் மேலாண்மைக்கென தமிழக அரசும் மத்திய அரசும் பரிந்துரைத்த சித்த மருந்துகளில் தலையானது கபசுரக் குடிநீர். இதுவரை இதில் என்ன ஆய்வுகள் நடைபெற்றன? Randomised Clinical Trial செய்துள்ளீர்களா? என பல தளங்ளில் கேட்டதும், அதனாலேயே தாமதப்பட்டதும், சில நேரங்களில் ஏளனபபடுத்துதலும் கூட ஏற்பட்டதுண்டு.

இவற்றிற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக இரு முக்கிய ஆய்வு முடிவுகளை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் (CCRS) உலகத்தரத்தில் முன்வரிசையில் உள்ள BMC பன்னாட்டு மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளது. ( ref:Natarajan et al . Trials (2021)22:623, Srivatsan et al. Trials (2021) 22:57) இவ்வகையான ஆய்வுகள் மட்டுமே உலகளவில் நம் மருத்துவத்துறையின் மாண்பை எடுத்துச் செல்லும்.சித்தமருத்துவர் கு.சிவராமன்

இரண்டு ஆய்வின் முடிவுகளும் கபசுரக் குடி நீர் வைரசின் பெருக்கத்தை கட்டுப்பாடு செய்வதை சரியாக ஒப்பு நோக்கி, துல்லிய மருத்துவ கணக்கீடுகளின் படி, வெளியிப்படுத்தியுள்ளது. ஒப்பு நோக்குகையில் இதன் பணி நுட்பம் வைரஸ் பெருக்கத்தை எப்படி கட்டுப்படுத்துகிறது என விளக்குகிறது. சில நேரங்களில் சித்த மருந்துகளை Placebo effect என வசைபாடுவதுண்டு. இவ்விரு ஆய்வுகளுமே சித்த மருந்துகள் placebo அல்ல என்று நிருப்பித்துள்ளது. 

Also Read:நொறுங்கத் தின்போம்

இந்த ஆய்வு ஒரு முக்கிய துவக்கம். இன்னும் பல படிகளைக் கடக்கும்போது சித்த மருத்துவத்தின் பல மரபு நுணுக்கங்களுக்கு அறிவியல் வெளிச்சம் கிடைப்பதும், விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு இதன் பயன் போய்ச் சேர்வதற்கும், தேவைப்படும் இடங்களில் பிற நவீனம் உள்ளிட்ட மருத்துவ முறைகளோடு ஒருங்கிணைந்து பணியாற்றவும் இவ்வாய்வுகள் வழிவகுக்கும்.

கடுமையான சூழலில் கபசுரக்குடிநீர் ஆய்வு வெளியாகியுள்ளது

இந்த ஆய்வுகளை கடுமையான நெருக்கடியான சூழலிலும் முன்னின்று நடத்தி ஆய்வு செய்து இன்று அறிவியல் உலகில் தலை நிமிரச்செய்திட்டமுதன்மை ஆய்வாளர்கள்  சித்தமருத்துவர். திரு நடராஜன்,  சித்த மருத்துவர் திருமதி அன்பரசி மற்றும் சித்தமருத்துவர். திரு மாணிக்க வாசகம் ஆகியோர் குழு. மூவர்க்கும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய மருத்துவ வல்லுனர்கள்  அனைவருக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்! மரு. மாணிக்கவாசகம் (புது தில்லி சிசிஆர்எஸ் ) மரு.  நடராஜன் & மரு அன்பரசி (சென்னை சிசிஆர்எஸ்)மூவரும் இன்று நம் துறை கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள்!

-நன்றி; மருத்துவர் கு.சிவராமன் முகநூல் பதிவு 

நிர்வாக இயக்குநர்,ஆரோக்கியா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் 

#CoronaSiddhaMaruthuvam #DRGSivaraman #SiddhaDrSivaraman #KabasuraKudineer #KabasuraKudineerForCronaTreatment   

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai


Comments


View More

Leave a Comments