மிக விரைவில் சீனிக்கற்றாழை மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு தொடக்கம்…


இன்று காலை எழுந்தவுடன் ஒரு புதிய முயற்சி வெற்றியில் முடிந்தது.சீனிக்கற்றாழையை நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி முகநூலில் சில பதிவுகள் இட்டுள்ளோம்.அதன் தண்டுப் பகுதியிலுள்ள முற்களை நீக்கிவிட்டு மேல்தோலுரித்து சிறிது துண்டுகளாக்கினால், நாம் வழக்கமாக உண்ணும் பட்டை அவரக்காய் பதத்தில் இருக்கும். சுவையானது இயற்கையாகவே லேசான புளிப்புடன் அவரையை மிஞ்சும்.

சீனிக்கற்றாழையை பற்றி வெளியான ஆய்வுக்கட்டுரைகளில் அதனை நாம் உட்கொள்வதன் மூலம் சிறுநீரகத்திற்கு நல்லது எனவும் எலும்பு மூட்டுக்களை சுற்றியுள்ள தசையில் ஏற்படும் வலியைக் குறைக்கும் எனவும் கூறுகின்றன.

Must Read: ஊரெங்கும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது ஏன்?. பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கேள்வி

சர்வசாதாரணமாக துளியளவும் பராமரிப்பின்றி வறண்ட நிலத்தில் நன்கு வளரும் இக்கற்றாழையானது நம் அன்றாட உணவுப்பட்டியலில் சேரக்கூடிய தகுதியைப் பெற்றது. இதன் தொடர் பயன்பாடானது Dialysis செய்துகொள்ளும் சிறுநீரகப் பிரச்சினையிலிருந்து கூட நம்மைக் காக்குமென நம்புகிறேன்.

உடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கும் சீனிக்கற்றாழை

நகரங்களில் குடியிருக்கும் மக்களும் ஒரு தொட்டியில் எளிதாக சீனிக்கற்றாழையை வளர்த்து பயன்பெறலாம்.  எவ்வித பராமரிப்பும் நஞ்சுதெளிப்புமின்றி நமக்குக் கிடைக்கும் வெகுசில உணவுகளில் சீனிக்கற்றாழையும் ஒன்றாகும். பழக்கத்திற்கு கொண்டுவந்து பயன் பெறுவோம். விரைவில் சீனிக்கற்றாழையில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் நம்மிடம் கிடைக்கும் என்பதை உங்களடுன் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்…

நன்றி; Karthick Mat முகநூல் பதிவு 

#சீனிக்கற்றாழைஊறுகாய் #கோபுரக்கள்ளிஊறுகாய் #MandacaruCactusPickle #CereusjamacaruPickle


Comments


View More

Leave a Comments