செப்டம்பர்30: இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை


இயற்கை வேளாண் உணவு பொருட்கள் 

இயற்கை உணவு பொருட்கள் கிடைக்குமிடம் 

இயற்கை உணவு விற்பவர்கள் பற்றிய தகவல் 

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

அக்டோபர் 3ம் தேதி “நம்சந்தை”

நம் சந்தை 06.10.2019 அன்று இயற்கை விவசாயிகளின் பெருங்கனவாகத் துவக்கப்பட்டது. 90 வது வார நம்சந்தை 03.10.2021 அன்று நடைபெறுகிறது. கொரோனா பெருந்தொற்றின் பொது முடக்கத்தில்  சில வாரங்கள் நடத்த இயலவில்லை.  அதனைத் த்விர 90 வாரங்கள் தொடர்ந்து நடைபெற்று சாதனை படைத்துள்ளது.

Also see: ஆரோக்கிய சுவை இன்றைய தலைப்பு செய்திகள்

இயற்கை விவசாயிகள் நேரிடையாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் இடம் நம்சந்தை விவசாயிகள் எந்த வித கமிஷனும் கட்ட்டணமும் இன்றி தங்கள் விற்பனைத் தொகையை முழுமையாக உடனடியாக பெறும் இடமே நம்சந்தை.

இயற்கை விவசாயிகள் நேரிடையாக நுகர்வோருக்கு விற்பனை

முழு நம்பகத்தன்மையுடன் நியாயமான விலையில் விற்பனை செய்யும் இடம்,  இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர்கள் சங்கமிக்கும் இடம், இலாப வெறியின்றி மனிதன் போற்றும் இடம் ,இயற்கை ஆர்வலர்கள் அன்புக்குரிய இடமாகவும் திகழ்கிறது., சமூகத்தில் அக்கற கொண்ட ஒவ்வொருவரும் ஆதரித்து வளர்த்தெடுக்க வேண்டியது நம்சந்தை. 

90 வது வாரம்- நம் சந்தை வரும் 03.10..2021  ஞாயிற்றுக் கிழமை நேரம் : காலை 6.00 மணிமுதல் 11.00 மணிவரை மட்டும் நடைபெறுகிறது.  பூமாலை வளாகம், மகளிர்திட்டஅலுவலக வளாகம், அண்ணாசாலை, வேலூர் என்ற முகவரியில் நம் சந்தை கூடுகிறது. 

Also Read: சத்துணவு மையத்தில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு

நம்சந்தையில் இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்டவைகள் மட்டும் விற்பனைச் செய்யப்படுகின்றன. விவசாயிகள் காய்கறிகள்  பழங்கள் கீரை வகைகள், இவைகளுடன் அரிசி, சிறுதானிய வகைகள், நாட்டு சக்கரை, எண்ணெய் வகைகள் அனைதையும் விற்பனைக்கு கொண்டுவர வேண்டுகிறோம். உழவர் சந்தை விலையினைவிட 20% கூடுதலாக  கொண்டு விலைப்பட்டியல் பலகை சந்தையில் வைக்கப்படுகிறது. இந்த விலையில் மட்டுமே விற்கப்படும். விலை கூட்டவும்படாது  குறைக்கவும்படாது.

கொரானா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடைக்கைகள் பின்பற்றப்படும் இந்த வாரம் நம் சந்தைக்கு கூடுதலாக காய்கறிகள் வரும் என எதிர்பார்க்கிறோம். நம்சந்தை பற்றி பலர் விசாரித்த வண்ணம் உள்ளனர்,. நுகர்வோரும் கூடுதலாக வர வாய்ப்புள்ளது. விவசாயிகள் தங்கள் தொடர்பில் உள்ள பிற நம் சந்தை விவசாயிகளுக்கும் தகவல் கொடுத்து நம் சந்தைக்கு அழைத்து வாருங்கள். புதிய இயற்கை விவசாயிகளையும் வரவேற்கிறோம். வாடிக்கையாளர்கள் அவசியம் நம்சந்தைக்கு வந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம். தொடர்புக்கு; கு.செந்தமிழ் செல்வன், நம் சந்தை, ஒருங்கிணைப்பாளர், 9443032436

விதைநெல் விற்பனைக்கு

எங்களது ஶ்ரீ கற்பகம் ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணையில் இருந்து முற்றிலும் இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்து கைகளால் அறுத்து அடித்து சுத்தம் செய்த நல்ல தரமான பாரம்பரிய நெல் ரகங்கள்  குறைந்த அளவில் மட்டுமே கீழ்கண்டவாறு இருப்பு உள்ளது. 

Also Read: புத்துணர்ச்சியுடன் ஆற்றல் தரும் இந்த உணவுகள் மிகவும் முக்கியம்….

1.கருப்பு கவுனி 100கிலோ ,2.மதுரை செந்நெல் 200 கிலோ.3. செம்புலி கார் 30 கிலோ 4.வாசனை சீரக சம்பா 50 கிலோ., 5.மைசூர் மல்லி 30 கிலோ 6.காலா பாத் பிரியாணி வாசனை நெல் 20 கிலோ 7.மொட்ட கூர் 5 கிலோ 8.மாப்பிள்ளை சம்பா 05 கிலோ 9. நவரா 15 கிலோ 10 . பிசினி 02 கிலோ  11. சித்த சன்னா 02 கிலோ 12. கல்லுருண்டை 15 கி.   

தொடர்புக்கு; கே. சுந்தரேசன் MA MH Ed MEd MPhil DICM Rtd Hm Jayamkondam. பாரம்பரிய நெல் ரகங்கள் பரவல் மையம் ஜெயங்கொண்டம் செல்.9788780578.

#OrganicFoods  #TodayOrganicPrice   #OrganicProducts #OrganicMarket #OrganicSandai


Comments


View More

Leave a Comments