மாம்பழ சீசன் தொடங்கி விட்டது....இந்த சத்துகளை எல்லாம் மிஸ் பண்ணாதீங்க...


இது மாம்பழ சீசன். இயற்கை முறையில் பழுத்த மாம்பழங்களை ஆசை தீர அளவோடு சாப்பிடுங்கள். மாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும் என்பார்கள். அந்த அளவுக்கு சிறப்பான இந்த மாம்பழத்தில் மாவுச்சத்து, நார்ச்சத்து, சர்க்கரை சத்து மற்றும் கொழுப்பு, புரதம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் என்று நிறைய தாது உப்புக்கள் உள்ளன.

சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை தினமும் சாப்பிடுவதால் அதில் உள்ள வைட்டமின் ஏ, சி ஆகியவை உடம்பில் சேருவதால் உடல் பொலிவுறும். மாம்பழத்தில் உள்ள தாது உப்புகள் ரத்தத்தில் சர்க்கரையுடன் நேரடியாக கலக்கிறது. இதனால் செல்கள் புத்துணர்ச்சியுடன் செயல்படுகின்றன.

மேலும் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் போன்றவை இருப்பதால் ரத்த ஓட்டம் தூண்டப்படுகிறது. மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஈ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. எனவே எடை குறைவாக உள்ள குழந்தைகள் மாம்பழக்கூழ் சாப்பிடுவதால் அவர்களுக்கு எடை அதிகரிக்கும்.

மாம்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் தோல் மினுமினுப்பு பெறும். கல்லீரல் குறைபாடு உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும். ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க நினைப்பவர்கள் மாம்பழம் சாப்பிடுவதால் பலன் கிடைக்கும்.

-மரியபெல்சின்

(திரு. மரியபெல்சின் அவர்களை  95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)

#MangoSeason #Mango #HealthyBenefitsOfMango #NutrientsOfMango

 


Comments


View More

Leave a Comments