தேங்காய்சாதத்துக்கு ஏற்ற சைட் டிஷ் என்ன தெரியுமா?


பொதுவாக தேங்காய் சாதம் எனில் அதில் துருவிய தேங்காயோ அல்லது ஒரு துண்டு தேங்காய் சில்லோ வரமிளகாயுடன் போட்டு ஓப்பேற்றி இருப்பார்கள். தேங்காய் சாதம் என்பது ஓர் பூலோக அமுதம்! அதை சீர் குலைக்கும் வகையில் யாரேனும் சொன்னால் துடிக்குது புஜம்.. ஜெயிப்பது நிஜம் எனும் கமல் குரல் எனக்குக் கேட்கும்.! நல்ல தேங்காய் சாதமானது எப்படி இருக்கணும்?

பொல பொலன்னு வடித்த சாதமாக கைகளில் ஒட்டாத குழைவுடன்..  தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளித்த கடலைபருப்பும் சீரகமும் தென்பட வேண்டும் தேங்காய் பூ, தேங்காய் சில்லு போன்றவை எல்லாம் டி இராஜேந்தர் பாடலுக்கு எடுத்த காட்சியமைப்பு போல வாலண்டியராகப் போட்டு தேங்காய் சாதம் என்று நிரூபிக்கத் தேவையில்லை! வறுத்த முந்திரி/ நிலக்கடலை. போட்டு செய்யும் தேங்காய் சாதமே மிகச் சிறந்தது.

Must Read: “அதிக கவிச்சி வாடையில்லாமல் அளவான புளிப்பு, காரத்துடன் மீன் குழம்பு…”

சாதம் குழைந்து விட்டால் அது நல்ல தேங்காய் சாதமே கிடையாது. சற்று விறைப்பாக வெந்த பதத்தில் தேங்காய் சாதம் சாப்பிடுவதே சாலச் சிறந்தது. எண்ணெய் கத்திரிக்காய், மசாலா பாகற்காய், பருப்புத் துவையல் போன்றவை தேங்காய் சாதத்தின் பெஸ்ட் காம்போ! மசால் வடை, வாழைப்பூ வடை இதற்கு செம காம்போ.

 என் அப்பா சூடான சாம்பாரில் ஊறிய மெதுவடை மீது 2 ஸ்பூன் நெய்விட்டு தேங்காய் சாதத்தோடு தருவார். சாப்பிடுபவர் பாவம் எது இப்படி ருசிக்குதுன்னு தெரியாது. எண்ணெய் கத்திரிக்காயும் தே.சாதத்திற்கு நல்ல காம்போ.! கார உருளைக்கிழங்கு/ வாழைக்காய் கறியும் அப்படியே.. சூடான வாழைப்பூ வடை/ சூடான மசால்வடையும் தேங்காய் சாதத்திற்கு  நல்ல காம்போ தான்.

தேங்காய் சாதம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

ஆனால் வடை மிகச் சூடாக இருக்க வேண்டும்.! அரைத்துவிட்ட சாம்பார் அல்லது சூடான சாம்பார் வடை இன்னும் பெஸ்ட்! மல்லி அல்லது புதினா சட்னி நார்த்தங்காய் தொக்கு இவையெல்லாம் தேங்காய் சாதத்திற்கு திகிரி தோஸ்த்து.! மிளகு போட்ட ஆம்லேட் என்பது அசைவப் பிரியர்களுக்கு உரியது.

மட்டன் குழம்புடன் ஒரே ஒரு முறை நீங்கள் தேங்காய் சாதம் சாப்பிட்டால் பிறகு அதற்கு அடிமையாகிவிடுவீர்கள். தேங்காய் சாதம் ஒரு சாத்வீகமான பிரியாணி அதை எண்ணெய் கத்திரிக்காயுடனோ எலும்புக் குழம்புடனோ நீங்கள் விருப்பம் போல சாப்பிடலாம்.! இருந்தாலும் அரைத்துவிட்ட சின்ன வெங்காயம் போட்ட பருப்பு சாம்பார் + வறுத்த கடலை புதினா துவையலுடன் சாப்பிடுவதே சொர்க்கமாகும்.

Must Read: தமிழ்நாடு அரசின் காலை உணவுத்திட்டம்… உள்ளம் நெகிழ்ந்த பதிவுகள்!

சூடான முறுக்கு, போண்டா வகைகள், பக்கோடா அதிலும் முந்திரிப் பக்கோடாவுடன் தேங்காய் சாதம் எனில் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். இதில் கொப்பரைத் தேங்காய் சில்லு வறுத்து சேர்ப்பார் என் அம்மா! அதுவே வேற லெவல் என்பதாகும். மிளகு காராசேவும் இதற்கு அருமையாக இருக்கும்! மிளகு குழம்பில் அவித்த முட்டை போட்டு இதோடு தொட்டுக் கொண்டால்,அடடா.

 மிளகு தூவிய முட்டை கலக்கியுடனும் மட்டன் சுக்காவுடனும் நண்பன் மோகன் வீட்டில் நான் சாப்பிட்ட தேங்காய் சாதத்திற்கு ஈடு இணை கிடையாது. மட்டன் குழம்போ, சிக்கன் குழம்போ இரண்டிற்கும் நல்ல காம்போ தேங்காய் சாதமே! உண்மையில் நல்ல பிரியாணியில் கூட இந்தளவு ருசியும் உண்ட திருப்தியும் வராது! தேங்காய் சாதம் ஒரு சைவ & அசைவ பிரியாணி என்பதே நான் கண்ட உண்மை.

-வெங்கடேஷ் ஆறுமுகம்

#coconutrice #foodreview #foodiereview #foodbloger

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 

Comments


View More

Leave a Comments