நாவுக்கு ருசியான மீன் உணவுகளை சுவைப்பதற்கான திருவிழா சென்னை தீவுதிடலில் தொடங்கியது


நாவுக்கு ருசியான மீன் உணவுகளை சுவைப்பதற்கான திருவிழா சென்னை தீவுதிடலில் தொடங்கியது...
சென்னை தீவுத்திடலில் இரண்டாவது ஆண்டாக தமிழக அரசின் மீன் வளத்துறையின் சார்பில் மீன் உணவு திருவிழா தொடங்கி உள்ளது. தமிழக மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இந்த உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தார்.  மீன் வளத்துறை முதன்மை செயலாளர் கே.கோபால் விழாவுக்கு தலைமை தாங்கினார். மீன் வளத்துறை ஆணையர் ஜெ.ஜெயகாந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார்.   
பிரத்யோக மீன் உணவு அரங்கம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. நாவில் எச்சில் ஊறும் மீன் வறுவல் வகைகள், மீன் தொக்கு வகைகள், மீன் குழம்பு வகைகள் அனைத்தும் தீவுதிடலில் இன்று மாலை வரை கிடைக்கும். இன்று மட்டுமின்றி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த உணவுத்திருவிழா நடைபெற உள்ளது. 
உண்வுத் திருவிழாவின் ஒரு கட்டமாக பிரபல சமையல் கலைஞர் சீத்தாரமன் பிரசாத் பங்கேற்று மீன் உணவுகளை விதம் விதமாக சமைப்பது குறித்து செய்து காட்டுகிறார். எனவே நாக்கை சப்புக் கொட்ட வைக்கும் மீன் உணவுகளை உண்ண தீவு திடலுக்கு வரலாம். சமையல் கலை படிக்கும் மாணவர்கள் மற்றும் மீனவ குப்பங்களின் மகளிர் பங்கேற்கும் மீன் உணவு சமையப்போட்டியும் நடைபெற உள்ளது.

கடல் உணவுகள் எல்லாமே ஆரோக்கியமானவைதான். அதிலும் கடல் உணவுகளில் முதன்மையான மீன் உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமானவை. அதிக கொழுப்பு உள்ளவர்கள், ஆட்டிறைச்சி, கோழிஇறைச்சி சாப்பிட வேண்டாம்  என சொல்லும் மருத்துவர்கள் கூட மீன் உணவு சாப்பிடுங்கள் ஆரோக்கியமானது என்று அறிவுறுத்துவது வழக்கம். மீன் உணவில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் மீன் உணவுகளில் உள்ளது. இது ரத்த அழுத்த த்தை குறைக்கும், மாரடைப்பை தடுக்கும். எனவே உடல் ஆரோக்கியத்துக்கு மீன் உணவுகளின் பங்கு முக்கியமானவையாகும். மீன் உணவை சுவைக்க விரும்புவோர் வயிற்றை காலியாக்கிக் கொண்டு தீவு திடல் வாருங்கள்.

 

#FishFoodFestival2021  #FishFoodFestival  #ChennaiFishFoodFestival #FishFoodFestival #Vanagaram | #FishMarketசென்னை


Comments


View More

Leave a Comments