மனநல பாதுகாப்பு; ஐந்து முக்கிய உணவுகளை மறக்க வேண்டாம்
உடல் நலம் எவ்வளவு முக்கியமோ இந்த ஒட்டு மொத்த உடலும் இயங்க மனம் நலமாக இருக்க வேண்டும். மனநலத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கும் மூளையில் உள்ள லிம்பிக்(limbic) என்ற முறை நம் உணர்வுகளை கட்டமைப்பதில், ஒழுங்கு படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. லிம்பிக் முறை ஆரோக்கியமாக இயங்க அல்லது மன நலன் அல்லது உணர்வு நலன் நன்றாக இருக்க நாம் உண்ண வேண்டிய உணவுகளைப் பார்க்கலாம். மனநல ஆரோக்கியத்துக்கு எதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை முதலில் பார்க்கலாம்.
ஆப்பிள்
மனநல ஆரோக்கியத்தில் முதலிடம் வகிக்கும் உணவு ஆப்பிள். இதில் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடுகளை ஊக்குவிக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உள்ளன. மனித செல்களின் அலர்ஜியை எதிர்த்துப் போராடும் திறன் கொண்ட சத்துகள் உள்ளன. நம் மனதின் உணர்வு நிலையை ஆரோக்கியமாக நிர்வகிக்க ஆப்பிள் உதவுகிறது. ஆப்பிளில் நார்சத்தும் அதிகம் உள்ளது.
பச்சை காய்கறிகள்
கேன்சரை உருவாக்கும் செல் பாதிப்புகளில் இருந்து உங்களை பாதுகாக்க அதிக நுண்ணூட்ட சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகளை அதிகம் உண்ண வேண்டும்.
கீரையில் உள்ள நுண்ணூட்ட சத்துகள் உங்கள் மூளையின் ஆரோக்கியத்துக்கு உதவும். மனநலமும் மேம்படும்.
ஆளிவிதைகள்
ஆளிவிதைகள், சியா, சூரியகாந்தி, சணல் விதைகள் மன நல ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. ஒமேக 3 கொழுப்பு அமிலம் உள்ள மீன் உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம்.
தக்காளி
தக்காளியில் (alpha-lipoic acid) ஆல்பா-லிபோயிக் அமிலம் மற்றும் ஃபோலிக் அமிலங்கள் உள்ளன. இவை மன நல ஆரோக்கியத்துக்கு முக்கியமானவையாகும். ஃபோலிக் அமிலம் குறைபாட்டினை ஃபோலேட் குறைபாடு என்று அழைக்கின்றனர். மனநலம் இல்லாமல் இருப்பவர்களில் மூன்றில் ஒருவருக்கு ஃபோலேட் குறைபாடு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தக்காளி மட்டுமின்றி, இறைச்சிகளிலும் இதே அளவு சத்துகள் உள்ளன.
காளான்
காளான் உணவு இரண்டு வழிகளில் மன நல ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. நம் உடலில் உள்ள ரத்தத்தில் இன்சுலின் அளவை குறைக்கிறது. இதனால் நம் உற்சாக மனநிலையை அதிகரிக்கிறது. இரண்டாவதாக, நம் குடலில் புரோபயோட்டிக் விளைவை செயல்படுத்தும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு துணை புரிகின்றன. ஜீரணத்துக்கு துணை புரிகின்றன. ஜீரணம் நன்றாக இருக்கும் பட்சத்தில் மனநலனும் ஆரோக்கியமாக இருக்கும்.
-பா.கனீஸ்வரி
#FiveFoodsYourMoods #FoodForMentalHealth #HealthyFood #TamilFoodNews
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
Comments