#HealtheventsCalender ஜூன் 12ம் தேதி கோவையில் இயற்கைவழி உழவர்கள் ஒன்றுகூடல் மற்றும் விற்பனை சந்தை


கோவை சூலூரில் உள்ள செஞ்சோலை இயற்கைவழி வேளாண் பண்ணையில் வரும் 12ம் தேதி ஞாயிறு அன்று மாலை 4.00 மணி முதல் இயற்கை வழி உழவர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற உள்ளது. 

இயற்கை நலவாழ்வியல் ஆசான் திரு.ஏங்கல்ஸ் ராஜா கலந்துகொண்டு, சிறப்புரை நிகழ்த்த உள்ளார். உழவர்கள் , நுகர்வோர்கள் என அனைவரையும் செஞ்சோலை அழைக்கிறது. 

Must Read: #TrendingHealthstory புற்றுநோயில் இருந்து குணம் அடைந்தாலும் வாழ்க்கை மாற்றம் முக்கியம்…:

நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை. அனுமதி இலவசம். குடும்பங்களாக ஒன்றிணைய வேண்டும் என்பதே செஞ்சோலையின் விருப்பம். தொடர்புக்கு செந்தில்குமரன் 9566665654, ஆவுர்.முத்து 9600873444 ஆகியோரை அழைக்கலாம்.  

நேரடி விற்பனை சந்தை 

செஞ்சோலை இயற்கைவழி உழவர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்ச்சியின் ஒருபகுதியாக  நேரடி விற்பனை சந்தையும்  நடைபெற உள்ளது. வரும் 12ம் தேதி காலை 09.30 மணி முதல் மதியம் 01.30 மணிவரை சந்தை நடைபெற உள்ளது. 

இந்த தகவலை தங்களது சக உழவர்களுக்கு, நுகர்வோருக்கு பகிருங்கள். தங்களது பகிர்வு ஒரு உழவருக்காவது உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். ஒரு நுகர்வோருக்காவது நல்லுணவு கிடைக்கும்.

#CoimbatoreEvents  #HealthEvents  #OrganicAgriMeet

.

 


Comments


View More

Leave a Comments