இது தெரிந்தால் நீங்கள் இன்ஸ்டண்ட் நூடுல்ஸை சாப்பிட மாட்டீர்கள்


நமது பாரம்பர்ய உணவு வகைகளில் ஒன்றான நூல், நூலான இடியாப்பம் போன்ற மேற்கத்திய உணவு நூடுல்ஸ். ஆனால், இடியாப்பத்தில் இருக்கும் ஆரோக்கியமான நன்மைகள் ஏதும் நூடுல்ஸில் இல்லை என்பது மீண்டும், மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. 

நூடுல்ஸின் இருண்ட பக்கம் 

நன்றாக பசி எடுக்கும்போது, ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடுவதற்கு பதில் ​​உடனடி நூடுல்ஸ் உணவு சாப்பிட்டால் போதும் என்று நினைக்கின்றோம். ஆனால், அந்த சிறிய அளவிலான ஒரு கப் நூடுல்ஸ் ஆரோக்கியமானதா இல்லையா என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உடனடி நூடுல்ஸின் ஆரோக்கியமற்ற இருண்ட பக்கத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம். 

இதையும் படியுங்கள்: நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டெடுக்கும் கருங்குறுவை அரிசி உணவு

மருத்துவரின் ஆய்வில் உறுதி 

அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் இரைப்பை குடலியல் மருத்துவர் ப்ராடன் கெவ் என்பவர் கூறுகையில், வீட்டில் தயாரிக்கப்பட்ட  நூடுல்ஸை நாம் உண்ட உடன் இரண்டு மணி நேரத்தில் செரிக்க முடியும். ஆனால், உடனடி நூடுல்ஸ் என கடைகளில் விற்கப்படும் நூடுல்ஸ் வகைகளை உண்டால் அவை பலமணி நேரம் ஜீரணம் ஆகாமலேயே இருக்கும்.  நூடுல்ஸ் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பதப்படுத்த உபயோகிக்கப்படும் ரசாயனங்கள்தான் உணவு ஜீரணிப்பதை தடுக்கின்றன என்பது ப்ராடன் கெவ் ஆய்வில் தெரியவந்த அம்சம். 

பாக்கெட் அல்லது கப் நூடுல்ஸ்கள் ஆரோக்கியமானதல்ல

எஃப்.டி.ஏ என்ன சொல்கிறது?

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஆய்வு முடிவின் படி  ஒருவர் நீண்ட காலத்துக்கு உடனடி நூடுல்ஸை சாப்பிட்டு வந்தால், கட்டி மற்றும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. உடனடி நூடுல்ஸ் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக குறிப்பாக செயற்கை ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இது முக்கியமாக வாசனைத் திரவியங்களில்தான் பயன்படுத்தப்படுகிறது. இதை உணவுப் பொருட்களில் பயன்படுத்தினால் நோய் தொற்று ஏற்படலாம் மற்றும் உடல் உறுப்புகளை பலவீனப்படுத்தலாம். இது தவிர புகையிலை பொருட்களில் பயன்படுத்தப்படும் புரோபிலீன் கிளைகோல் என்ற வேதிப்பொருளும் உடனடி நூடுல்ஸில் உள்ளன. 

பாக்கெட் நூடுல்ஸ்கள் ஆபத்தானவை 

பெரும்பாலான உடனடி நூடுல்ஸ்கள் அல்லது கப் நூடுல்ஸ்கள்ள் கொண்டுள்ள பாக்கெட்கள் அல்லது கப்கள்  ரெசின்கள் மற்றும் பிற பாலிமர்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை கரிம கலவையை கொண்டிருக்கின்றன. பாக்கெட் அல்லது கப் நூடுல்ஸ்களை மைக்ரோ ஓவனில் வைக்கும்போது, அது விரைவாக நூடுல்ஸில் சேர வாய்ப்புள்ளது. அதனை சாப்பிடும்போது உங்கள் உடலுக்குள் நுழைந்து வளர்சிதை மாற்றத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும்..

இதையும் படியுங்கள்:தேன்வில்வம் சாப்பிட்டால் 21 விதமான நன்மைகள்

செயற்கை ரசாயனங்கள்

சோள சிரப், பாமாயில் மற்றும் மோனோசோடியம் குளுட்டமேட் (MSG) போன்ற பிற செயற்கை ரசாயனங்கள் உடனடி நூடுல்ஸில் உள்ளன. இவற்றை நீண்ட காலத்திற்கு உட்கொண்டால் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படும். எனவே, ஆய்வின் படியும் வல்லுநர்கள் கூற்றுப்படியும், உடனடி நூடுல்ஸை எல்லா வகையிலும் நாம் தவிர்க்க வேண்டும், நீங்கள் உண்மையில் நூடுல்ஸை சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று விரும்பினால், வீட்டிலேயே புதியதாக தயாரிக்கப்பட்ட நூடுல்ஸை வேகவைத்த பச்சை காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம். 

-ஆகேறன்

#InstantNoodlesNotHealthy  #NoodlesIsUnhealthy  #AvoidNoodles #DontEatInstantNoodles

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


Comments


View More

Leave a Comments