கில்லி கறிவேப்பிலையும், கொம்பன் முருங்கையும்-சிறார்களுக்கான சிறப்பான நூல்கள்…


சித்தமருத்தவர் திரு. விக்ரம் குமார் மருத்துவம் குறித்து எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதி வருகிறார். எந்த ஒரு தகவலையும் சிறியவர்களுக்கு கடத்தும் போது அது நீண்டகாலம் இந்த சமுதாயத்தில் வேர் ஊன்றி இருக்கும். அந்த வகையில் திரு.. விக்ரம் குமார் மூலிகைகளை சிறார்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் நான்கு குறுநூல்கள் எழுதியுள்ளார். அந்த நூல்கள் இப்போது வெளியாகின்றன!

Must Read: விவசாயமும், மனிதன் ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது….

1. சிக்குபுக்கு வண்டி பிரண்டையும், மூலிகைப் பட்டாசு முடக்கறுத்தானும்! 

2.செல்லப்பிள்ளை சுண்டைக்காயும், தாய்மாமன் மணத்தக்காளியும்!

3.கில்லி கறிவேப்பிலையும், கொம்பன் முருங்கையும்!

4.சூப்பர்மேன் வேம்பும், பயில்வான் ஆலமரமும்!

மூலிகைகள், அதன் மருத்துவப் பலன்கள்… குறிப்புகள்… போன்றவற்றை சிறார்களுக்கு இந்தக் குறுநூல்கள் எடுத்துச் சொல்லும்! உங்கள் குழந்தைகளுக்கு மூலிகைகள் பற்றி தெரியப்படுத்த இந்த குறுநூல்கள் உதவும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது! 

மருத்துவர் விக்ரம் குமாரின் நான்கு நூல்கள்

சித்த மருத்துவத்தின் ஆதாரமான மூலிகைகள் சார் உலகத்திற்குள் சிறார்களை நுழைக்க இந்தக் குறுநூல்களை சிறார்களுக்குப் பரிசளிக்கலாம்! குறுநூலின் விலை – ரூ.25. காக்கைக் கூடு பதிப்பகம் வெளியிடுகிறது!... சென்னை புத்தகத் திருவிழாவின் காக்கைக்கூடு அரங்கு எண் – 589, 590 இல் குறுநூல்கள் விற்பனைக்கு கிடைக்கும். அஞ்சல் மூலம் புத்தகத்தைப் பெற தொடர்புக்கு… 9043605144, வாட்ஸ்-ஆப் 9944457603!

#BooksAboutHearbal #HealthBooksForChildren #DRVikaramKumar

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

 

Comments


View More

Leave a Comments